செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புருஷனின் கல்யாணத்துக்கே பாக்யா செய்யும் மட்டமான செயல்.. சத்திய சோதனைடா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு பெரிய திருமணத்திற்கு கேட்டரிங் ஆர்டரை எடுப்பதற்காக தற்போது கிடைத்திருக்கும் கல்யாணத்திற்கு சிறப்பாக சமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு பாக்யா, செல்வி மற்றும் ஜெனி உடன் ஸ்கூட்டியில் செல்கிறார்.

மூன்று பேரும் ஒரே பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் போனதால், அவர்களை போலீஸ் வளைத்து பிடித்து வண்டியை பறிமுதல் செய்கிறது. அந்த நேரம் பாக்யா ஜெனிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று வாய்கூசாமல் பொய் பேசுகிறார்.

Also Read: புருஷன் கல்யாணத்துக்கே அழைத்த மகள்.. ராதிகாவின் திருமணத்தை நிறுத்த போட்ட பிளான்

பிறகு ஃபைன் கட்ட சொல்ல போலீசிடம், மருத்துவமனைக்கு செல்வதற்கு தான் பணம் இருக்கிறது. ஃபைன் கட்ட பணம் இல்லை என பாக்யா போலீசிடம் பாவமாக பேசி நடித்து எஸ்கேப் ஆகிறார். இப்படி போலீசிடம் தப்பிப்பதற்காக மட்டமான வேலையை செய்து எங்கு செல்கிறார் என்றால், அவருடைய புருஷனின் திருமணத்திற்காக தான் சமைத்து கொடுக்க போகிறார்.

இதை அறியாத பாக்யா அந்த திருமணத்திற்கு நன்றாக சமைத்து கொடுத்து கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று சாமியிடமும் வேண்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வேலைக்காரி செல்வி மண்டபத்திற்கு வெளியே இருக்கும் திருமண தம்பதியர்களின் பெயர்களை பார்த்து அது பாக்யாவின் கணவர் கோபியின் திருமணம்தான் என தெரிந்து கொள்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

இதன்பிறகு பாக்யாவிற்கும் ராதிகாவின் மகள் மூலம் ராதிகா-கோபி இருவருக்கும் தான் இந்த திருமணம் நடக்கிறது என்ற உண்மை தெரிகிறது. கட்டுன புருஷனின் கல்யாணத்திற்கு சமைத்துக் கொடுக்கும் சத்திய சோதனை ஆக பாக்யாவின் நிலை மாறியது.

மேலும் தன்னுடைய தொழிலில் உதவுவதற்கு இந்த கல்யாணம் ஆர்டர் மிகவும் முக்கியம் என்பதால், விவாகரத்து ஆன பிறகு கோபியை பற்றி கவலைப்படாமல் அந்த ஆர்டரை சிறப்பாக நடத்திக் கொடுக்க போகிறார் பாக்யா.

Also Read: சைடு கேப்பில் சில்லரைத்தனமான சேட்டை செய்யும் கோபி.. விழி பிதுங்கி நிற்கும் பாக்யாவின் குடும்பம்

Trending News