வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தான்.. மீண்டும் சிக்கலில் மாட்டி தவிக்கும் பாக்யா

Baakiyalakshmi : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கணேஷ் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் அமிர்தா மற்றும் நிலாவை பார்க்க வேண்டும் என்று அவர் கூறுவதாக கணேஷின் அம்மா பாக்யாவிடம் போன் செய்து கூறியுள்ளார்.

ஆனால் ஈஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் அமிர்தாவை அனுப்ப சம்மதிக்கவில்லை. இதையடுத்து பாக்யா வற்புறுத்தலின் பெயரில் சம்மதம் வாங்கி விடுகிறார். இதைத்தொடர்ந்து பாக்யா, அமிர்தா, நிலா மூவரும் கணேஷ் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு யாரும் எதிர்பார்க்காத பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதாவது கணேஷ், அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று நாடகம் ஆடி தான் இவர்களை வரவழைத்து உள்ளார். மேலும் கணேஷை பார்த்தவுடன் பாக்யா, அமிர்தாவை அழைத்து வெளியே செல்ல முற்படும் போது கதவை சாத்தி விடுகிறார்கள். இதைத்தொடர்ந்து அமிர்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து கணேஷ் மிரட்டுகிறார்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸில் வெடிக்கும் சக்காளத்தி சண்டை.. கோபத்தை கக்கும் கதிர் 

மேலும் பாக்யாவிடம் இருந்து நிலாவை வாங்கிக் கொண்டு, அமிர்தாவையும் காரில் கடத்தி செல்கிறார் கணேஷ். பாக்யா என்ன செய்வது என்று தெரியாமல் கார் பின்னால் ஓடுகிறார். கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாக பாக்யா இப்போது பெரும் சிக்கலில் இருக்கிறார்.

குடும்பத்தின் பேச்சை மீறி அமிர்தாவை அழைத்து வந்த நிலையில் இப்போது இவ்வாறு அசம்பாவிதம் நடந்துள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் சிஐடி வேலை பார்த்து பாக்யா தனது மருமகளை கண்டுபிடிக்க உள்ளார். ஆகையால் இனி பாக்கியலட்சுமி தொடர் இன்னும் சுவாரசியமாக இருக்க உள்ளது.

Also Read : டிஆர்பி-யில் தெறிக்கவிடும் டாப் 5 சேனல்கள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?

Trending News