விஜய் டிவியில் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ராதிகாவிற்கு கோபி மீது பரிதாபம் வந்துள்ளது. ஆனால் கோபியை திருமணம் செய்து கொள்ள தற்போதும் ராதிகா சம்மதிக்காமல் உள்ளார்.
ஆனால் ராதிகாவின் அண்ணன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு ராதிகாவிடம் எல்லா விஷயத்தையும் சொல்லலாம் என பிளான் போட்டுள்ளார். இந்நிலையில் பாக்யா, குடும்பத்தின் ஒவ்வொரு செலவையும் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.
Also read : பாக்யாவின் பெட்ரூமிற்குள் வந்த எக்ஸ் புருஷன்.. பீறிக்கிட்டு வந்த ஆசை!
இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக தனது வளையலை செல்வியிடம் அடமானம் வைத்து பணம் வாங்கி வரச் சொன்னார். அதற்குள்ளாகவே கோபி இனியாவின் ஸ்கூல் பீஸ்ஸை கட்டி விட்டார். இதனால் பாக்யாவின் குடும்பம் பாக்யாவை ஏளனமாக பேசி இருந்தது.
தற்போது அடுத்த பணப் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அதாவது கரண்ட் பில் 17000 வந்துள்ளது. இதைப் பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால் இதுவரை ஒரு பத்தாயிரம் தான் கரண்ட் பில் வரும் என நினைத்ததாக பாக்யா கூற, இப்போது அப்பாவின் அருமை தெரிகிறதா என செழியன் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து விட்டார்.
Also read : கையும் களவுமாக மாட்டிய ஆதி.. சரவணன் செய்த வேலையால் காரித்துப்பிய குடும்பம்
ஒரு கரண்ட் பில் கூட கட்ட வக்கில்லை என்பது போல செழியன் பேசுகிறார். இதனால் எழில், செழியன் இடையே வாய் தகராறு முற்றிப்போகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் எழில் இந்த கரண்ட் பில் நான் கட்டிக் கொள்கிறேன் என சவால் விடுகிறார். மேலும் பாக்கியா, இந்தப் பணக்கஷ்டத்தை போக்க வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெனி செழியனிடம் வீட்டிற்கு பணம் கொடுத்து உதவுமாறு கேட்கிறார். ஆனால் வழக்கமாக தரும் பணத்தை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக தர மாட்டேன் என செழியன் கூறுகிறார். இந்நிலையில் இந்த மொத்த குடும்ப செலவையும் பாக்யா எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.
Also read : கல்யாணம் என்ற பெயரில் மதக்கலவரத்தை உண்டாக்கிய சிவகாமி.. அதிர்ச்சியில் மொத்த குடும்பம்