புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபியை புலம்ப விட்டு ராதிகாவுடன் சண்டை போட வைத்த பாக்யா.. மருமகளுடன் மகா சங்கமத்திற்கு கிளம்பிய ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரியின் நிலைமையை பார்த்து பாக்யா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சோகமாக இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி கோபி சொன்னதை நினைத்து ஈஸ்வரி அழுது புலம்பி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் பாக்கியா என்ன ஆறுதல் சொன்னாலும் ஈஸ்வரி மனது மாறவில்லை.

உடனே பாக்யா, அத்தையின் மனசை மாற்ற வேண்டும் என்றால் நாம் அத்தையே கூட்டிட்டு கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம் என்று மாமனாரிடம் சொல்கிறார். அதாவது ஏற்கனவே அத்தை கும்பகோணம் போகணும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அதனால் அத்தை ஆசைப்பட்ட மாதிரி கும்பகோணத்தில் இருக்கும் கோவிலுக்கு கூட்டு போயிட்டு வரலாம் என்று பாக்யா மாமனாரிடம் சொல்கிறார்.

புலம்பி தவிக்கும் கோபி

அதற்கு மாமனார், இப்ப திடீர்னு கிளம்பினால் ரெஸ்டாரண்டை யார் பார்த்துப்பா, வீட்டிலேயும் ஜெனி குழந்தை வைத்துக் கொண்டு எப்படி தனியாக இருப்பாள் என்று கேட்கிறார். உடனே பாக்யா அதற்கெல்லாம் நான் ஏற்பாடு செய்து விடுகிறேன். நீங்கள் அதை எல்லாம் பற்றி கவலைப்படாதீர்கள். அத்தையிடம் பேசி நம் அனைவரும் கோவிலுக்கு போகலாம் என்று சொல்கிறார்.

இதைப்பற்றி பாக்யா குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி ஹோட்டலை அமிர்தவையும், ஜெனி மற்றும் செல்வியை வீட்டில் இருப்பவர்களையும் பார்த்துக்க சொல்கிறார். இதற்கு இடையே கோபி, பாக்யா சொன்னது நினைத்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அம்மாவை நாம் தவறாக நினைத்து விட்டோமோ, அப்படி செய்திருக்கக்கூடாதோ என்று குற்ற உணர்ச்சி வந்து விட்டது.

இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் ஹோட்டலுக்கு போய் அங்கே இருப்பவர்களிடம் டென்ஷனாக கோபப்பட்டு விட்டார். உடனே கோபி வழக்கம் போல் குடிப்பதற்காக பார் போய்விட்டார். அங்கே வந்த நண்பரிடம் ராதிகா மற்றும் அவருடைய அம்மா சொன்னதை வைத்து நான் என்னுடைய அம்மாவை தவறாக புரிந்து கொண்டேன் என்று பாக்கியா பேசியதை நினைத்து புலம்பி தவிக்கிறார்.

இப்படி கோபி தொடர்ந்து புலம்பிய நிலையில் ராதிகா வீட்டிற்கு திரும்புகிறார். ஆனால் அங்கே போனதும் ராதிகா அம்மா ஏழரை கூட்டி பிரச்சினை பண்ணுவதால் ராதிகா மற்றும் கோபிக்கு இடையே சண்டை நடக்கிறது. இன்னொரு பக்கம் பாக்கியா, மாமனார் மாமியாருடன் சேர்ந்து கும்பகோணத்துக்கு போவதற்கு தயாராகி விட்டார். ஆனால் இதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, சரவணனுக்கு கல்யாணம் முடிந்ததை ஒட்டி கோவிலுக்கு போக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் மறுபடியும் இரண்டு நாடகத்தை சேர்க்கும் விதமாக மகா சங்கமம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் கதை இல்லை என்றாலும் 2000 எபிசோடு வரை கதையை நகர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தில் அரச்ச மாவையே அரைச்சு உருட்டிட்டு வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News