திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சக்களத்தி சண்டையில் ஜெயிக்கப் போகும் பாக்யா.. இதுல கோபி தல உருள போவது கன்ஃபார்ம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்கும் வகையில் மோசமான சக்காளத்தி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபியின் இரண்டு மனைவிகளான பாக்யா அல்லது ராதிகா இருவருள் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது தெரியப்போகிறது. இதனால் கோபியின் தலை தான் உருள்வது கன்ஃபார்ம்.

ஏனென்றால் 20 லட்சத்தை கொடுத்துவிட்டு வீட்டில் இரு, இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேறு என பாக்யாவிடம் கோபி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதற்காக பாக்யாவிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய கோபி, ஒரே மாதத்தில் 20 லட்சத்தை தர வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

Also Read: ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில் 

இந்த நிலையில் ஒரு வாரமாக கேட்டரிங் தொழிலில் சம்பாதித்த 2 லட்சத்தை கோபியிடம் கொடுத்து விட்டார். இதனால் மீதம் 18 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பாக்யா இருக்கிறார். இந்த சமயம் பார்த்து பாக்யாவை விட்டு கைநழுவி சென்ற கேண்டீன் ஆர்டருக்கு மறுபடியும் டெண்டர் விட்டதால், அதற்கு விண்ணப்பித்த பாக்யாவிற்கு இன்டர்வியூ வைத்திருந்தனர்.

இந்த ஆர்டர் முன்பே பாக்யாவிற்கு கிடைக்க வேண்டியது, ஆனால் ராதிகா இடையில் புகுந்து கெடுத்துவிட்டார். மறுபடியும் தற்போது இன்டர்வியூக்கு வந்திருக்கும் பாக்யாவிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு மடக்க பார்க்கிறார். இருப்பினும் சமாளித்த பாக்யா, கடைசியில் சமைப்பதற்கு ஆங்கிலம் அவசியம் இல்லை.

Also Read: விஜய் டிவியின் குத்துவிளக்கு பிரியங்காவா இது.? மாலத்தீவில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட வைரல் வீடியோ!

இருப்பினும் அது தேவை என்றால், ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்கிறேன் என்று ராதிகாவிடம் சவால் விடுகிறார். இப்படி அலுவலகத்திலேயே சக்காளத்தி சண்டை முற்றி வாக்குவாதத்தின் எல்லைக்கு செல்கின்றனர். இருப்பினும் ஒரு முறை பாக்யாவிற்கு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம் என்று அந்த கம்பெனி மேனேஜர் பாக்யாவிடம் கேண்டீன் ஆர்டரை கொடுக்கிறார்.

இதன் பிறகு ஒரே இடத்தில் 2 மனைவிகளும் வேலை செய்வதால் அங்கு நடக்கும் ஒரு சில விஷயத்தை வைத்து ராதிகா நிச்சயம் கோபியை உருட்ட போகிறார். ‘முட்டு சந்தில் மாட்டிக்கொண்ட எலி போல்’ கோபியின் கெதி இனி அதோ கெதி தான்.

Also Read: உடல் மெலிந்து கிக்கான புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி.. கிறங்கி போன இளசுகள்

Trending News