புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ராதிகா மூஞ்சில் கரியை பூசிய பாக்யா.. அடுத்தடுத்து வெடிக்கப் போகும் சண்டை

பாக்கியலட்சுமி என்ற பிரபல தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செகரட்டரி எலக்சன் நடைபெற்றது. இப்போ போட்டியில் பாக்யாவுக்கு எதிராக ராதிகா போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவுக்காக பாக்கியா குடும்பம் மற்றும் ராதிகா, கோபி ஆகியோர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதில் பாக்யா தான் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுகிறார். இதனால் ராதிகா மூஞ்சில் கரியை பூசி விட்டார்கள். ஆகையால் கோபி மீது கோபப்படுகிறார் ராதிகா. ஏனென்றால் வேலை உண்டு தான் உண்டு என்று இருந்த ராதிகாவை வலுக்கட்டாயமாக கோபி தேர்தலில் நிற்க வைத்தார்.

Also Read : இந்த வாரம் நாமினேஷனில் தேர்வான 6 போட்டியாளர்கள்.. உறுதியாக வெளியேறப் போகும் நபர்

ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் தற்போது ராதிகா அசிங்கப்பட்டு விட்டார். மேலும் பாக்யாவின் வெற்றியை அவரது குடும்பம் கோலாகலமாக கொண்டாடுகிறது. ராதிகாவுக்கு வெளியில்தான் பிரச்சனை என்றால் வீட்டிலும் பிரச்சனை சுத்தி சுத்தி அடிக்கிறது. அடிக்கடி இனியா மற்றும் ராதிகா இடையே சண்டை ஏற்படுகிறது.

இனியா அதிகமாக பேச ஒரு கட்டத்திற்கு மேல் ராதிகாவுக்கு கோபம் வந்து கையை ஓங்குகிறார். உடனே ராதிகாவின் கையை இனியா பிடித்த விடுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இது கோபிக்கு தெரிய வந்தால் ராதிகா மீது கடும் கோபம் காட்டுவார்.

Also Read : மீண்டும் சீல் வைக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கதை இல்லனா சீரியலை இழுத்து மூடுங்க விஜய் டிவி

இதனால் பல சண்டைகள் கோபி வீட்டில் வெடிக்க காத்திருக்கிறது. ஒரு பக்கம் லோனுக்காக பாக்யா எங்கு பார்த்தாலும் அலைந்து வருகிறார். ஆனால் பேங்கில் கணவரின் விபரம் தெரிந்தால் மட்டுமே லோன் கொடுப்போம் என்று சொன்னதால் ஏமாற்றம் அடைகிறார். கடைசியில் தனக்கு கான்ட்ராக்ட் கொடுத்த ஓனரிடம் இது பற்றி பேசுகிறார்.

அப்போது நானே உங்களுக்கு கேரன்டி கையெழுத்து போடுவதாக அவர் கூறுவதால் பாக்யா மகிழ்ச்சி அடைகிறார். இப்போது குடும்பம், தொழில் மட்டுமின்றி காலணியில் உள்ள வேலையும் பாக்யா தான் பார்க்க வேண்டும். இதில் எல்லாவற்றிலுமே பல பிரச்சனைகளை சந்தித்து கடைசியில் வெற்றி காண உள்ளார் பாக்யா.

Also Read : மைனாவுக்கு லட்சக்கணக்கில் வாரி கொடுக்கும் பிக்பாஸ்.. ஒரு நாள் சம்பளமே இவ்வளவா!

Trending News