வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ராதிகாவின் மூஞ்சில் கரியை பூசிய பாக்கியா.. மயூ எடுத்த முடிவு, மாமியாருக்கு கிடைக்கும் தண்டனை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக ஜெயிலில் இருக்கிறார். அந்த வகையில் பாக்கியா, மாமியார் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகாவின் மகள் மயூ உடன் எதிர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது மயூ வீட்டில் அம்மா தடுக்கி விழும்போது நான் அங்கே தான் இருந்தேன். ஈஸ்வரி பாட்டியிடம் பேசிக்கொண்டு அம்மா திரும்பும் பொழுது பூச்செடி மீது கால் வைத்து வலிக்கு விழுந்தார். அம்மாவை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை நான் பார்த்தேன் என்று பாக்கியவுடன் சொல்கிறார்.

பாக்யாவிற்கு கிடைத்த ஆதாரம்

இதை கேட்டதும் பாக்யாவிற்கு ரொம்பவே சந்தோஷமாகிவிட்டது. அப்பொழுது பாக்கியா வீட்டில் இருப்பவர்கள், ஈஸ்வரி கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது என்பதால் அனைவரும் கிளம்பி கொண்டிருக்கிறார்கள். பாக்கியா நீங்க எல்லாருக்கும் கோர்ட்டுக்கு போங்கள் எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கிறது என்று சொல்லி கிளம்புகிறார்.

உடனே தாத்தா மற்றும் பேரன்கள் அனைவரும் கோர்ட்டுக்கு போய்விட்டார்கள். அங்கே கோபி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராதிகா மற்றும் அவருடைய அம்மா ஈஸ்வரி வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஈஸ்வரி வந்துவிடுகிறார். உடனே கோர்ட்டில் ஆஜர் படுத்திய ஈஸ்வரியை காப்பாற்ற எந்தவித ஆதாரமும் இல்லாததால் நீதிபதி ஈஸ்வரிக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பு சொல்லி விடுகிறார்கள்.

இதை கேட்டதும் ராதிகாவின் அம்மாவுக்கு சொல்ல முடியாத அளவிற்கு சந்தோசம் ஏற்பட்டு விட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பாக்கியா கோர்ட்டுக்குள் நுழைந்து லாயரிடம் ஈஸ்வரிக்கு ஆதரவாக ஒரு சாட்சி இருக்கிறது என்று நீதிபதியிடம் சொல்ல சொல்கிறார். அதன்படி அந்த சாட்சியை கூட்டிட்டு வாருங்கள் என்று சொல்லிய நிலையில் பழனிச்சாமி, மயூவை கூட்டிட்டு வருகிறார்.

மயூ கோர்ட்டுக்கு வந்ததும் ராதிகா அதிர்ச்சியில் இருக்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா முகத்தில் பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் மயூ எதைப் பற்றியும் யோசிக்காமல் பயத்துடனே வீட்டில் நடந்த உண்மையே அப்படியே தெள்ளத்தெளிவாக கோர்ட்டில் சொல்கிறார். அதன் மூலம் ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த நிலையில் அவரை கோர்ட் வெளியே விட்டு விடுகிறது.

இதனைக் கேட்ட ராதிகா, நாம்தான் அவசரப்பட்டு அம்மா பேச்சைக் கேட்டு முட்டாள்தனம் பண்ணிட்டோம் என்று வருந்துகிறார். ஆனால் இதற்கு எல்லாம் காரணமான ராதிகாவின் அம்மாவிற்கு வார்னிங் பனிஷ்மென்ட் கொடுத்து கோர்ட் இந்த கேஸை முடித்து விடுகிறார்கள். எப்படியோ மாமியாரை காப்பாற்ற பாக்கியா எடுத்து வைத்த காரியம் வெற்றியாக முடிந்து விட்டது.

இதனால் இனியும் ராதிகாவுடன் கோபி சேர்ந்து வாழ்வாரா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் கோபிக்கு எப்போதுமே மயு மீது பாசம் அன்பு அதிகம் உண்டு. அப்படி இருக்கும் பொழுது மகளாக நினைக்கும் மயூவுக்காக ராதிகாவுடன் சேர வாய்ப்பு இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News