புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Bhakkiyalakshmi: பாக்யா செஞ்ச முதல் உருப்படியான விஷயம்.. பேய்க்கும் பேய்க்கும் சண்டை, வேடிக்கை பார்க்க போகும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட பிளான் படி ஈஸ்வரியை ராதிகா வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். ஆனால் ஈஸ்வரியை பார்த்த அதிர்ச்சியில் ராதிகா அம்மா அப்படி உரைந்து போய் இருக்கிறார். ஏனென்றால் ராதிகா அம்மாவிற்கு ஈஸ்வரியை பார்த்தாலே பிடிக்காது. இதுல ஒரே வீட்டில் வேற இருக்கணும் என்று சொன்னதும் ராதிகா அம்மாவுக்கு தூக்கிவாரி போட்டுச்சு.

அத்துடன் நான் படுத்துற பாட்டுக்கு துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட வைக்கிறேன் என்று ராதிகா ஒரு முடிவுக்கு வந்து விட்டார். அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி வந்ததில் ராதிகாவுக்கும் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. ஆனால் கோபி தன்னை நம்பி வந்திருக்கும் அம்மாவை நன்றாக சொகுசாக எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று புலம்புகிறார்.

விழி பிதுங்கி போய் நிற்கும் கோபி

உடனே ராதிகா அவர்களுக்கு தேவையான வசதி மற்றும் மாடிப்படி ஏற முடியலன்னா லிப்ட் எல்லாத்தையும் வச்சுக்கலாமா என்று நக்கலாக கேட்கிறார். அதையும் உண்மை என்று நம்பி கோபி ஆம் சரி என்று தலையாட்டுகிறார். பிறகு ராதிகா, எதற்காக உங்கள் அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்தீங்க என்று மறுபடியும் கேள்வி கேட்கிறார்.

அதற்கு கோபி எங்க அம்மா இல்லாம என்னால இருக்க முடியாது. என்ன நம்பி வந்திருக்காங்க நான் நல்லா பாத்துக்கணும் என்று சொன்னதையே சொல்லிட்டு இருக்காரு. இதனால் ராதிகா இனி இவரிடம் பேசி ஒரு பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார். பிறகு ஈஸ்வரி ஜம்பமா உக்காந்துகிட்டு தண்ணீர் வேணும் தண்ணி வேணும் என்று கேட்கிறார்.

ஆனால் இவர் கேட்டது ரூமுக்குள் இருக்கும் கோபி மற்றும் ராதிகாவுக்கு கேட்கவில்லை. இதையெல்லாம் கேட்டும் கேட்காத மாதிரி ராதிகா அம்மா அடுப்பங்கரையில் நிற்கிறார். பிறகு ஈஸ்வரி அடுப்பாங்கறையில் போயிட்டு அலப்பறை பண்ணி ராதிகா அம்மாவுடன் சண்டை போடுகிறார். ராதிகா அம்மாவும் கொஞ்சம் கூட இறங்க மாட்டேன் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரிக்கு போட்டியாக பதிலடி கொடுத்து பேசுகிறார்.

அந்த வகையில் இவர்களுடைய சண்டை தினமும் நடக்கப் போகிறது. சொல்வார்களே பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்க போகிறது என்று. அதுபோலத்தான் இந்த ரெண்டு பாட்டிகளுக்கும் இடையே நடக்க போகும் சண்டையை ராதிகாவின் மகள் மயு, கோபி மற்றும் ராதிகா அனைவரும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.

யார் யாரை சமாதானப்படுத்த முடியும் என்பது தெரியாமல் விழி பிதுங்கி போய் இருக்கப் போகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கோபியாக இருந்தாலும் பாக்கியா எடுத்த உருப்படியான முடிவு தான். அதாவது ஈஸ்வரி கிளம்பும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நீங்க போகக்கூடாது என்று கெஞ்சி இருந்தால் ஈஸ்வரி இங்கேயே இருந்து நாட்டாமை பண்ணி இருப்பார்.

அதனால் விட்டு வேடிக்கை பார்க்கலாம் என்று கோபியுடன் ஈஸ்வரியை அனுப்பி வைத்து தான் பாக்கியா செஞ்ச நல்ல காரியம் என்று சொல்லலாம். இனி சாப்பாடுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் தினம் தினம் ஈஸ்வரி அவஸ்தைப்பட போகிறார்.

Trending News