வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சக்காளத்தி முன் கெத்து காட்டிய பாக்கியலட்சுமி.. கிழித்து தொங்கவிடப்பட்ட ராதிகா

கணவர் பிரிந்து சென்றாலும் மனைவி அந்த குடும்பத்தை, குடும்பத் தலைவர் என்ற இடத்தில் தன்னிச்சையாக துணிச்சலுடன் வழி நடத்த முடியும் என்று விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் எடுத்துரைக்கின்றனர்.

இந்த நிலையில் பல போராட்டத்திற்குப் பிறகு பெரிய நிறுவனத்தின் கேண்டீன் ஆர்டரை பெற்ற பாக்யா, அதற்கான திறப்பு விழாவை அவரின் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அதில் கலந்து கொண்ட ராதிகாவின் முன்பு பாக்யா கெத்து காட்டுகிறார்.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

ஏனென்றால் ஆங்கிலம் தெரியாது என அசிங்கப்படுத்திய ராதிகாவின் முன்பு இங்கிலீஷில் பேசி அசத்துகிறார். ‘தெரியாத ஒரு விஷயத்தை வைத்து யாராவது நம்மை அடிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கக் கூடாது’ என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி சீரியலை சூடு பிடிக்க வைத்துள்ளளார்.

மேலும் ஒரே இடத்தில் வேலை செய்யும் பாக்யா மற்றும் ராதிகா இருவருக்கும் இனிதான் சக்காளத்தி சண்டை நடக்கப் போகிறது. அத்துடன் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா படிக்கும் அதே ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் நடிகர் ரஞ்சித்-தும் இணைந்து படிப்பதால் சீரியலில் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

Also Read: 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.. பெரிய மனுஷன் பண்ற வேலையா! முகம் சுளிக்க வைத்த புகைப்படம்

மேலும் பாக்யாவிற்கும் ரஞ்சித்திற்கும் நல்ல நட்பு ஏற்படப் போகிறது. மறுபுறம் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ராதிகாவிற்கு தீனி போட முடியாமல் கோபியின் கதிதான் அதோகதியாக போகிறது. கடைசியில் ஒன்றும் இல்லாமல் கோபி நடு ரோட்டிற்கு வரப் போகிறார்.

ஆனால் கேட்டரிங் தொழில் பாக்யா படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய தொழிலதிபராக மாறுவார். இதற்கு நண்பராக ரஞ்சித்-தும் உடன் பயணித்து சீரியலை மேலும் சுவாரசியமாக்குவார். இனி கோபியின் கதாபாத்திரத்தை விட ரஞ்சித்-தின் கதாபாத்திரம் தான் பாக்கியலட்சுமி சீரியலில் -அழுத்தமாக பேசப்படும்.

Also Read: மண்டையில இருந்த கொண்டையை மறந்த பாக்கியலட்சுமி.. கதை இல்லாமல் உருட்டும் விஜய் டிவி

Trending News