புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பார்லரில் ராதிகாவை மிரட்டிவிட்ட பாக்யா.. டிஆர்பி-யை ஏற்றுவதற்காகவே விஜய் டிவியின் வில்லத்தனம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தை தவிர மற்றதை எல்லாம் யோசிக்காத பாக்யாவிற்கு அவருடைய கணவர் கோபி விவாகரத்து செய்தது தாங்கிக்க கொள்ள முடியாத வேதனையாக மாறியது. அதைவிட தற்போது 2-வது திருமணம் செய்து கொண்ட ராதிகாவை அழைத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டுக்கே வந்து வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அவருக்கு மேலும் வருத்தத்தை தந்தது.

இதற்கெல்லாம் காரணம் கோபி மாடல் பொண்டாட்டியை தான் விரும்புகிறாரோ! என்று தற்போது பாக்யா அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ராதிகா போலவே பார்லருக்கு சென்று தன்னையும் மாடலாக மாற்றிக் கொள்கிறார். ஆனால் சுவாரசியம் என்னவென்றால் ராதிகாவும் அதே பார்லரில் ஃபேஷியல் செய்து கொள்கிறார்.

Also Read: விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

அப்போது அவருடைய முகம் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று பார்லர் பணிப்பெண் கேட்க, ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்படுவதாக ராதிகா சொல்கிறார். இதை பாக்யா மற்றும் செல்வி கேட்டு விடுகின்றனர்.

மேலும் ராதிகாவிற்கும் பாக்யா அந்தப் பார்லருக்கு வந்து அவரை அழகு படுத்திக் கொள்வதை பார்த்து விடுகிறார். இவ்வளவு நாள் குடும்பம் தான் முக்கியம் என பில்டப் கொடுத்துக் கொண்டிருந்த பாக்யாவா இது! என்று வாயடைத்துப் போகிறார். அத்துடன் பாக்யா, தன்னை விட்டு சென்ற கோபிக்கு ராதிகாவை விட எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: டிஆர்பிக்காக நயன்தாராவை வம்பிழுக்கும் விஜய் டிவி.. இதே வேலையா தான் இருப்பாங்களோ!

அதுமட்டுமல்ல டிஆர்பி-யில் தற்போது பின் தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஏதாவது சுவாரசியத்தை காட்டினால் தான் முன்னிலை வகிக்கும் என்பதற்காகவே விஜய் டிவி இது போன்ற வில்லத்தனமான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பாக்யாவின் நியூ கெட்டப் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

அதேபோல் ராதிகாவின் வில்லத்தனமும் வெளிப்பட வேண்டும் என்றும் சின்னத்திரை ரசிகர்கள் விரும்புகின்றனர். அதற்கு பாக்யா பதிலடி கொடுக்கவும் நினைக்கின்றனர். இதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக இனிவரும் நாட்களில் பாக்கியலட்சுமி சீரியலின் கதைகளம் இருந்தால் நிச்சயம் டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கும்.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

Trending News