Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் மகள் மயூ சொன்ன வாக்குமூலம் படி ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று கோர்ட்டில் தீர்ப்பு கிடைத்துவிட்டது. இதனால் பாக்யாவின் குடும்பம் சந்தோஷத்தில் ஈஸ்வரியை அரவணைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் ராதிகா, எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மக்களை கூட்டிட்டு வெளியே வருகிறார்.
வெளியே வந்ததும் பாக்கியா, மயுடன் பேசுவதற்கு போகிறார். ஆனால் ராதிகா பேச அனுமதி கொடுக்காமல், என்னுடைய அனுமதி இல்லாமல் என் மகளை இப்படி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்தி விட்டீர்கள். அவள் ஒரு சின்ன பொண்ணு என்பதையும் மறந்துட்டு இந்த மாதிரி எப்படி உங்களால பண்ண முடிகிறது என்று பாக்யாவை திட்டிவிட்டு மகளை கூட்டிட்டு போகிறார்.
கோபியுடன் முட்டி மோதும் ராதிகா
அப்படி போகும் பொழுது, எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று அம்மாவிடமும் சண்டை போட்டு கோபத்தில் கிளம்புகிறார். ஆனால் ராதிகாவை பார்த்தால், எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இன்னும் திருந்தாமல் பாக்யா குடும்பத்துடன் ஒட்டுமொத்த கோபத்துடன் இருக்கிற மாதிரி தான் போகிறார்.
இதையெல்லாம் தாண்டி ஈஸ்வரியுடன் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோபி பக்கத்தில் போய் பேச முடியாமல் தவிக்கிறார். பிறகு வீட்டிற்கு வரும் ஈஸ்வரியை, அமிர்தா மற்றும் ஜெனி ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். உள்ளே வந்த ஈஸ்வரி அனைவரிடமும் அனுசரணையாக பேசுகிறார். ஆனாலும் இந்த அவமானங்களை கண்டு தனியாக அழுது புலம்புகிறார்.
பிறகு வழக்கம் போல் பாக்கியா, மாமியாருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார். அத்துடன் மாமியாருக்கு செய்ய வேண்டிய வேலைகளையும் செய்து அந்த வீட்டின் சம்பளம் இல்லாமல் வேலைக்காரி போல அனைத்து பணிவிடையும் செய்கிறார். இப்படியே தன்னுடைய காலத்தை ஓட்டிவிடலாம் என்று பாக்கியா நினைக்கிறார் போல.
ஆனால் ஈஸ்வரி மற்றும் தாத்தா, அடுத்த கட்டமாக பாக்யாவிற்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று முயற்சி எடுக்கும் வகையில் பேசிக்கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ராதிகா வீட்டிற்கு வீட்டுக்கு போன கோபி, ராதிகாவிடம் சண்டை போடுகிறார். ஆனாலும் திருந்தாத ராதிகா, தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்பதற்கு ஏற்ப கோபியிடம் சண்டை போடுகிறார்.
ஆக மொத்தத்தில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல தான் ராதிகாவை நம்பி ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தற்போது நெற்கதியாக கோபி நிற்கிறார். ஆனால் கோபிக்கு, மயு மீது இருக்கும் பாசம் மட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அதனால் மயூவே தன் மகளாக நினைக்கும் கோபி, மயூக்காக ராதிகாவுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவம்
- ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகாவின் அம்மாவுக்கு கோபி கொடுக்கும் பதிலடி
- ராதிகாவின் திமிரை அடக்கிய வாரிசு
- ராதிகாவின் மூஞ்சில் கரியை பூசிய பாக்கியா