வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஸ்கூல் பீஸ், இபி பில் என ஒரு வாரமா வச்சு செய்யும் பாக்யா.. சுயமரியாதை காப்பாற்ற எடுத்த சவால்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் இனியாவின் ஸ்கூல் ஃபீஸ் கட்ட பாக்கியா தனது வளையலை அடமான வைத்து கட்டச் செல்லும்போது கோபி கட்டிவிட்டு ஏளனமாக பேசினார்.

அதன் பிறகு கரண்ட் பில் 17 ஆயிரம் வந்தவுடன் பாக்யா ஷாக் ஆகிவிடுகிறார். இந்த பணத்தைக் கட்ட வீட்டுக்குள் ஒரு பிரளயமே வேடிக்கிறது. அதன் பிறகு எழில் செழியன் இடம் சவால் விட்டு தான் இந்த பணத்தை கட்டுகிறேன் என கூறுகிறார். இவ்வாறு அடிக்கடி பண பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

Also Read :மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

இது தவிர ஒரு வருடத்திற்குள் 40 லட்சம் பணத்தை கோபிக்கு தருவதாக பாக்கியா சொல்லி இருக்கிறார். இதனால் ஏதாவது பெருசாக செய்ய வேண்டும் என்று பாக்கியா நினைத்துக் கொண்டிருக்கும் போது செய்தி தாளில் ஒரு செய்தியைப் படிக்கிறார்.

ஒரு கேட்டரிங் ஆர்டருக்காக போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக ஜெனி இடம் சொல்லி அப்ளிகேஷன் பில்லப் பண்ண சொல்லுகிறார் பாக்கியா. அதன்பின்பு இதே ஆர்டருக்காக நிறைய பெண்கள் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

Also Read :தனி ஒருவனாக தீவிரவாதிகளிடமிருந்து போராடும் பாரதி.. நெல்சன் பார்த்தா சினிமாவை விட்டு ஓடிருவாரு

அதாவது 15 நிமிடங்களில் யார் சுவையான ஒரு டிஷ்ஷை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்த ஆர்டர் என்று போட்டி நடத்தப்படுகிறது. அதில் பாக்யாவும் கலந்து கொண்டு 15 நிமிடங்களில், ஒரு டிஷ்ஷை சமைத்து முடிக்கிறார். இதில் தனக்கு வெற்றி கிடைக்குமா என்ற பதட்டத்தில் பாக்யா உள்ளார்.

பாக்யா சமையலில் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். கண்டிப்பாக இந்த ஆர்டர் பாக்யாவுக்கு தான் கிடைக்கும். ஆனாலும் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த ஆர்டரை பாக்கியா செய்து முடிப்பார். மேலும் இதன் மூலம் கிடைக்கும் பணம் கண்டிப்பாக பாக்யாவின் குடும்பத்திற்கு உதவும்.

Also Read :படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினியா இது? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் அண்ணனா!

Trending News