பட குழுவினரை சக்ஸஸ் மீட்டில் வச்சு செஞ்ச பாக்யராஜ்.. அசடு வழிந்த ஹிப் ஹாப் ஆதி

Bhagyaraj Hip Hop Aadhi
Bhagyaraj Hip Hop Aadhi

Baakiyaraj: அவன் பொருளை எடுத்து அவனையே செய்யறதுன்னு சொல்லுவாங்க. அதை நம் தமிழ் சினிமாவில் இருக்கும் நக்கல் நாயகர்களுக்கு சரியாகப் பொருந்தும். இப்போதைய தமிழ் சினிமா ட்ரெண்ட் எப்படி மாறி இருக்கிறது என்பதை நக்கலாக போட்டு உடைத்து அசிங்கப்படுத்திவிட்டு அசால்டாக சிரித்து விடுவார்கள்.

சத்யராஜ், பாக்கியராஜ் போன்றவர்கள் எல்லாம் இந்த லிஸ்ட் தான். இவர்களை மைக் கொடுத்து பேச வைப்பது என்பது கத்தி மேல் நடக்கும் நிலைமை தான். அப்படி ஒரு சூழ்நிலையை தான் ஹிப் ஹாப் ஆதி நடித்த பீடி சார் பட குழு சந்தித்திருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி நடித்த இந்த படத்தில் பாக்கியராஜும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியதோடு படக் குழுவினருடன் கேக் வெட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஐசரி வேலன் மற்றும் ஹீரோ ஆதி.

பட குழுவினரை மேடையிலேயே வச்சு செஞ்ச பாக்யராஜ்

இந்த விழா மேடையில் பாக்யராஜுக்கும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாக்யராஜ் அசால்ட் ஆக முன்னெல்லாம் ஒரு படம் 125 நாள் தாண்டி ஓடினால் தான் அதை வெற்றிப்படம் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது ஆறு நாள் ஓடுனாலே பிளாக் பஸ்டர் ஹிட் என்று சொல்லிவிடுகிறார்கள்.

படம் ரிலீஸ் ஆகும் வரைக்கும் முன்னாடி யாருக்கும் படத்தை திரையிட்டு காட்ட மாட்டோம். ஆனால் இப்போதெல்லாம் ரிலீஸ் க்கு முன்னாடியே பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு படம் போட்டு காட்டி விடுகிறார்கள்.

படம் ரிலீசுக்கு முன்னாடியும் சரி, அதற்கு பிறகும் சரி ஏகப்பட்ட தேவையில்லாத பில்டப் புகழ் கொடுக்கப்படுகிறது என சரமாரியாக பேசி விட்டார். பாக்யராஜ் யாரையும் சொல்கிறேன் என்ற பெயரில் பிடி சார் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தை மறைமுகமாக கலாய்த்து இருப்பது இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

தொடர்ந்து சறுக்கல்களை சந்திக்கும் ஆதி

Advertisement Amazon Prime Banner