வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாக்கியராஜின் முதல் மனைவி யார் தெரியுமா.? சிவாஜி, எம்ஜிஆர் உடன் வைரலாகும் திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாக்கியராஜ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து இயக்கி வந்தார்.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சுவர் இல்லாத சித்திரங்கள், சொக்கத்தங்கம், முந்தானை முடிச்சு மற்றும் பவுனு பவுனுதான் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றி கண்டார். அதன் பிறகு ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி வெற்றியும் கொடுத்தார்.

பாக்கியராஜ் பிரவீனா என்பவரை முதலில் தனது படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடிக்க வைத்து வந்துள்ளார். அதன்பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். பின்பு இருவருக்கும் காதல் ஏற்பட பாக்யராஜ் பிரவீனா திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஓரிரு வருடங்களிலேயே பிரவீனா இறந்தார். தற்போது பாக்யராஜின் திருமணத்தின்போது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

bhagyaraj praveena
bhagyaraj praveena

அதன்பிறகுதான் பாக்யராஜ்ஒரு சில வருடங்கள் திரைப்படங்கள் இயக்குவது கவனம் செலுத்தி வந்தார். பின்பு பூர்ணிமாவின் மீது பாக்யராஜுக்கு காதல் ஏற்பட்டு பின்பு இவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பாக்கியராஜ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். அந்த பிறகு துப்பறிவாளன் போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் கூட பொன்மகள்வந்தாள் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடித்துள்ளார்.

Trending News