Actor Bhakkiyaraj: பொதுவாக பாக்கியராஜ் உடைய நடிப்பையும் தாண்டி அவரிடம் ரசிக்க வைத்த விஷயம் என்றால் ஒரு தினுசாக படத்தை எடுப்பது தான். இவருடைய படங்கள் நகைச்சுவையாகவும் இருக்கும் அதே நேரத்தில் கிளுகிளுப்பாகவும், பார்ப்பவர்களுக்கு போர் அடிக்காத வகையில் படங்களை எடுப்பதில் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் கிடையாது.
அத்துடன் சினிமாவில் திரைக்கதையின் மாமன்னன் என்று பெயரை எடுத்தவர். மேலும் எம்ஜிஆரின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர். அப்படிப்பட்ட இவரின் மகன் சாந்தனு இன்றுவரை அவருக்கு என்று ஒரு முத்திரையை பதிக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்.
Also read: பாக்யராஜின் படங்களை தாங்கி பிடித்த 4 நடிகர்கள்.. ராசுக்குட்டி வெற்றிக்கு காரணம் இவரே
சினிமாவைப் பொறுத்தவரை அப்பா நல்ல நடிகராக பெயர் எடுத்து விட்டால் அவருடைய வாரிசுக்கு வரும் பட வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அனைத்தும் தந்தையே சார்ந்து விடுகிறது. அந்த வகையில் பாக்கியராஜ், சாந்தனுக்கு வரும் கதைகளை கேட்கும் பொழுது அவருக்கு பிடிக்காததால் அதையெல்லாம் நிராகரித்திருக்கிறார்.
அதில் ஒன்றுதான் இயக்குனர் சசிகுமார் சொன்ன அந்தப் படத்தின் கதை. அதாவது இவர் கதை எழுதும்போதே சாந்தனுவை மனதில் வைத்துக்கொண்டு தான் ஒவ்வொரு காட்சிகளையும் எழுதி இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இந்த படத்தில் சாந்தனு நடித்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையுடன் பாக்கியராஜிடம் போய் கேட்டிருக்கிறார்.
Also read: திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’
ஆனால் அவரோ எனக்கு இந்த கதை பிடிக்கவில்லை அதனால் என் பையன் நடிக்க மாட்டான் என்று பிடிவாதமாக மறுத்திருக்கிறார். இதை கேட்ட சசிகுமார் கெஞ்சி பார்த்து இந்த ஒரு முறை அவர் நடிப்பதற்கு அனுமதி கொடுங்கள் நன்றாக வரும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் வேண்டாம் என்று ஒத்த வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார்.
அதன் பின் சசிகுமார் இவருடைய கேரக்டருக்கு ஜெய்யை வைத்து நடிக்க வைத்திருக்கிறார். அப்படி நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் சுப்ரமணியபுரம். ஒருவேளை இந்த கேரக்டரில் சாந்தனு நடித்திருந்தால் அவருக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ பாக்கியராஜ் சொந்த பையனுக்கு சூனியம் வைத்து விட்டார்.
Also read: விஜயகாந்தின் வாரிசுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. 13 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்