திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கடைசிவரை பெயர் தெரியாமல் நடிப்பினாலேயே மனதில் நின்ற நடிகர்.. விடாமல் வாய்ப்பு கொடுத்த பாக்யராஜ்

நல்ல திரைப்படங்களின் மூலம் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் முன்பு அடையாளம் காணப்பட்ட ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பெயர் பெற்ற நடிகர்களுக்கு மத்தியில் இறுதிவரை தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை ரசிக்க வைத்த ஒரு நடிகரும் இருக்கிறார். ஆனால் அவருடைய பெயர் என்ன என்று இப்போது வரை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பாக்யராஜ் நல்ல திறமையான நடிகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருபவர். அப்படி அவர் திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகரின் பெயர் இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் தன்னுடைய காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து நடிப்பினாலேயே மனதில் நின்று விட்டார்.

Also read:தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

குலதெய்வம் என்ற திரைப்படத்தில் நடித்த காரணமாக குலதெய்வம் ராஜகோபால் என்று அழைக்கப்படும் அந்த நடிகர் பாக்யராஜின் மூன்று திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார். அவரை இன்றைய தலைமுறைகளுக்கு அதிகம் தெரியாது. ஆனால் 80, 90 காலகட்ட மக்களுக்கு அவரை நிச்சயம் தெரிந்திருக்கும்.

ஆராரோ ஆரிராரோ படத்தில் குலதெய்வம் ராஜகோபால்

kuladeivam-rajagopal
kuladeivam-rajagopal

இப்போது கூட அவர் போட்டோவை பார்த்தால் இவர் பாக்யராஜ் படத்தில் நடித்திருப்பார் என்று கூறுவார்கள். ஆனால் அவர் பெயரை கேட்டால் மட்டும் பெரும்பாலானோருக்கு சொல்லத் தெரியாது. அந்த வகையில் பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிராரோ, எங்க சின்ன ராசா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Also read:பாக்யராஜ் குடும்பத்தால் கண்கலங்கிய எம்ஜிஆர்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை சம்பவம்

அதிலும் ஆராரோ ஆரிராரோ திரைப்படத்தில் பாக்யராஜ் மனநல மருத்துவமனையில் வேலை பார்ப்பவராக இருப்பார். அதில் மிலிட்டரி கேப்டன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவராக இவர் நடித்திருப்பார். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

50 காலகட்டத்தில் தன்னுடைய நடிப்பை ஆரம்பித்த இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் மரணத்திற்கு பின்னும் இவருடைய படங்கள் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். அதன் பிறகும் கூட 1995 வரை இவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனது.

Also read:பழைய பாக்யராஜ், பாண்டியராஜனை கண்முன் கொண்டுவந்த இயக்குனர்.. இளசுகளுக்கு வைத்த ஆப்பு

Trending News