Ilaiyaraja and Bhagyaraj: பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமாக பெயர் வாங்கிய பாக்கியராஜ், எப்படி எந்த சூழ்நிலையில் இசையமைப்பாளராக ஹார்மோனி பொட்டியை கையில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம். அதாவது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தின் மூலம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் பணியாற்றினார். இதனை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
அடுத்து பாக்யராஜின் நடிப்பு திறமையை பார்த்த பாரதிராஜா “புதிய வார்ப்புகள்” என்ற படத்தில் நடிக்க வைத்தார். பின்பு இயக்குனர் திறமையை வளர்த்துக் கொண்ட பாக்கியராஜ் முதன்முதலாக 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து இயக்குனராக பல படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார்.
பாக்யராஜ் ஹார்மோனிய பொட்டியை கையில் எடுக்க காரணம்
முதல் படம் ஹிட்டானதற்கு கங்கை அமரனும் ஒரு காரணம் என்பதால் அடுத்தடுத்த படங்களில் கங்கை அமரனை இசையமைக்க முடிவு செய்தார். அந்த சூழ்நிலையில் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தார்கள். ஆனால் இவர்கள் போட்ட கண்டிஷன் கங்கை அமரனுக்கு பதிலாக இளையராஜா இசையமைத்தல் படம் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதை கேட்ட பாக்யராஜ், இல்லை நான் கங்கை அமரனுக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்துட்டேன். அதனால் அதை மீற முடியாது என்று சொல்லி இருக்கிறார். பிறகு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சரவணன், தனிப்பட்ட முறையில் கங்கை அமரனை பார்த்து பாக்யராஜ் இயக்கும் முந்தானை முடிச்சு படத்தை நாங்கள் தான் தயாரிக்கப் போகிறோம். ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
இதைப் பற்றி பாக்யராஜிடம் சொன்னதற்கு அவர் உங்களுக்கு வாக்குறுதி கொடுத்ததாக சொல்லி இளையராஜாவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். அதனால் நீங்களாக வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து பாக்யராஜ் இடம் சொல்லிவிட்டால் இளையராஜா இசையமைத்து விடுவார் என்று கூறி இருக்கிறார்கள். அதன்படி கங்கை அமரனும், பாக்யராஜிடம் சில பல காரணங்களை சொல்லி இசையமைக்க முடியாது என்று பின் வாங்கி விட்டார்.
பிறகு பாக்யராஜ், இளையராஜா கூட்டணியில் முந்தானை முடிச்சு படம் வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பாக்யராஜ் இயக்கும் படங்களுக்கு இளையராஜா இசை அமைக்க ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து “இது நம்ம ஆளு” என்ற படத்தின் கதையை தயார் செய்த நிலையில் இதற்கும் இளையராஜா இசையமைப்பதற்காக ஸ்டூடியோவிற்கு பாக்யராஜ் போய் இருக்கிறார்.
ஆனால் அங்கு இருந்த அசிஸ்டன்ட் நீங்கள் இளையராஜாவை பார்க்க வேண்டும் என்றால் வீட்டில் போய் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதற்கு நான் ஏன் வீட்டிற்கு போகவேண்டும், அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரை பார்ப்பதற்கு போகலாம். நான் படம் விஷயமாக வந்திருக்கிறேன் இதை பற்றி பேச வேண்டும் என்றால் ஸ்டுடியோவில் வைத்து தான் பேச முடியும்.
அதனால் வீட்டிற்கு வர முடியாது ஸ்டூடியோ வந்ததும் எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள் என்று சொல்லி பாக்யராஜ் கிளம்பி இருக்கிறார். ஆனால் இளையராஜாவிடம் இருந்து எந்த போனும் வரவில்லை கூப்பிடவும் இல்லை என்பதால் ரொம்பவே பாக்கியராஜ் அப்செட் ஆகிவிட்டார். இதனால் ஏன் நாம் மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். என்னால் மியூசிக் போட முடியாதா என்று ஆவேசத்தில் ஹார்மோனிய பெட்டியை பாக்யராஜ் தொட்டிருக்கிறார்.
அப்படி அவர் இசையமைக்க ஆரம்பித்த முதல் படம் தான் இது நம்ம ஆளு. இதிலுள்ள பாடல்களும் ஹிட்டானதால் அடுத்த சில படங்களுக்கும் பாக்யராஜ் தொடர்ந்து இசையமைத்திருக்கிறார். பிறகு இவர்களுடைய சண்டை நீடித்துக் கொண்டே போன நிலையில் கங்கைஅமரன் உனக்கும் இளையராஜாவுக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி பேசி ஒரு முடிவுக்கு வந்து விடுங்க என்று சொல்லி இருக்கிறார்.
அதன்படி பாக்கியராஜ், இளையராஜாவை சந்தித்து பேசி சமரசம் செய்திருக்கிறார். அடுத்ததாக “ராசுக்குட்டி” படத்துக்கு இளையராஜா தான் மியூசிக் பண்ணி கொடுத்திருக்கிறார். அப்பொழுது கூட இளையராஜா இப்பொழுதெல்லாம் எல்லாரும் ஹார்மோனி பெட்டியை தொட்டுராங்க என்று பாக்யராஜை அவமானப்படுத்தும் விதமாக கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இளையராஜாவின் ஆணவத்தை அடக்க வேண்டும் என்பதற்காக பாக்யராஜ் இசையமைப்பாளராக மாறி வெற்றி பெற்றிருக்கிறார்.
- Ilaiyaraja: இப்ப தான் இவ்வளவு சர்ச்சை, ஜெயலலிதாவையே பயமுறுத்திய இளையராஜா
- Ilaiyaraja: இளையராஜாவை வச்சு செஞ்ச சீனு ராமசாமி
- Ilaiyaraja: வாயுள்ள புள்ள எங்க போனாலும் பொழச்சுக்கும்