உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தான் இயக்குனர் பாக்யராஜ். அவரைப் போன்றே அவருடைய சிஷ்யர்களான பாண்டியராஜன் மற்றும் பார்த்திபன் இருவரும் இன்று தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
பாக்யராஜ்ஜிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்த இவர்கள் இருவரும் பின்னாளில் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடினார்கள். சமீபத்தில் கூட பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி பாக்கியராஜின் பட்டறையில் இருந்து வந்த இவர்கள் இருவரும் டைரக்ஷனில் சாதித்து வந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் இயக்குனராக ஜெயிக்க முடியாமல் போயிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல பல திரைப்படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து நம்மை கவர்ந்த நடிகர் லிவிங்ஸ்டன் தான்.
இவர் பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் கன்னி ராசி, காக்கிச்சட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு திரை கதையும் எழுதி இருக்கிறார்.
Also read:பாக்கியராஜ் கொடுத்த வாய்ப்பு.. சீரியல் மூலம் தன்னை நிரூபித்த ராஜு பாய்
அதன் பிறகு விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் ஆரம்பித்த இவருடைய நடிப்பு பயணம் இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் அவர் ஒரு இயக்குனராக ஜெயிக்கவில்லை என்ற ஒரு குறையும் அவருக்கு இருக்கிறது. அந்த வகையில் பார்த்திபன், பாண்டியராஜுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் இவருக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர் இப்போது ஒரு நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
Also read:மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி