வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்த பாக்யராஜின் முதல் கல்யாணம்.. மனைவி எப்படி இறந்து போனார் தெரியுமா?

இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி பெற்ற பாக்யராஜ் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவ்வாறு பிசியாக இருக்கும் பாக்யராஜின் குடும்பமே திரையுலகில் பிரபலமானவர்கள் தான்.

அந்த வகையில் இவருடைய மனைவி பூர்ணிமா 80 காலகட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோன்று இவருடைய மகன் சாந்தனு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் மகள் சரண்யாவும் தன் அப்பாவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து சாந்தனுவின் மனைவி கீர்த்தியும் மீடியாவில் பிரபலமாக இருப்பவர் தான்.

Also read: டி.ராஜேந்தர், பாக்யராஜ் போல வளர முடியாமல் போன நட்சத்திரம்.. பன்முகத் திறமை இருந்தும் புகழடையாமல் போன பரிதாபம்

இப்படி இருக்கும் நிலையில் பாக்யராஜின் முதல் மனைவியும் ஒரு நடிகை தான் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் பாக்யராஜ் நடிகை பிரவீனாவை காதலித்து கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுடைய திருமண வாழ்வு பிரவீனாவின் மரணத்தால் முடிவுக்கு வந்தது.

பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா

praveena-bhakyaraj
praveena-bhakyaraj

அந்த வகையில் அவர் 1983 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இவர் 1976 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பாக்யராஜின் பாமா ருக்மணி திரைப்படத்தில் நடித்தார்.

Also read: பாக்யராஜ் சாயலில் நடித்த 4 நடிகர்கள்.. டைமிங் காமெடியில் பட்டைய கிளப்பும் சிவகார்த்திகேயன்

அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் துளிர்த்தது. அதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில காலம் கூட சேர்ந்து வாழவில்லை. இப்படி பாக்யராஜின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏனென்றால் ஏற்கனவே இவர்கள் இருவரும் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

அதை தொடர்ந்து பூர்ணிமா முந்தானை முடிச்சு திரைப்படத்திலும் பாக்யராஜின் முதல் மனைவியாக ஓரிரு காட்சியில் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையிலேயே இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்கள் இருவரும் 38 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பாக்யராஜின் முதல் மனைவி பற்றிய இந்த விஷயம் பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Also read: கடைசிவரை பெயர் தெரியாமல் நடிப்பினாலேயே மனதில் நின்ற நடிகர்.. விடாமல் வாய்ப்பு கொடுத்த பாக்யராஜ்

Trending News