வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

செழியன் உடன் ஒன்று சேர போகும் பாக்யாவின் மருமகள்.. இதை பார்த்தும் திருந்தாத கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது செழியன் ஜெனியின் விவாகரத்து விஷயம் பூதாகரமாக வெடித்து கோர்ட் வரை போயிருக்கிறது. இதை ஜெனியை சமாளித்து இருந்தால் கூட கொஞ்ச நாட்களுக்குப் பிறகு செழியனை புரிந்து கொண்டு வாழ போயிருப்பார்.

ஆனால் இதற்கு இடையில் ஜெனியின் அப்பா வில்லனாக வந்தது தான் அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது. அத்துடன் ஜெனியையும் குழப்பி விட்டு செழியன் மீது தவறான புகார்களை கொடுத்து விவாகரத்து வாங்கிய ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.

ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் நான் ஜெனியை விட்டு பிரிவதாக இல்லை என்று தான் செய்த அனைத்து தவறுக்கும் கோர்ட்டில் அனைவரது முன்னாடியும் ஜெனி இடம் மன்னிப்பு கேட்கிறார். நான் செய்த தவறுக்கும் துரோகத்திற்கும் என்னை மன்னித்துவிடு. என்கூட வாழ வா என்று ஜெனி இடம் காலில் விழாத குறையாக கெஞ்சி கேட்கிறார் செழியன்.

Also read: எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி செய்த உருப்படியான விஷயம்.. டிஆர்பி-யில் ஜொலிக்கும் சீரியல்

பார்க்கவே பாவமாக இருக்கிறது என்பது போல அவருடைய நடிப்பு உண்மையிலே பாராட்டக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ஜெனி, செழியன் மீது வைத்திருக்கும் உண்மையான காதல் இந்த இடத்தில் தோற்றுப் போக வாய்ப்பில்லை.

அதனால் ஜெனியின் இந்த மாற்றத்தை புரிந்து கொண்டு ஜெனி ஒன்று சேர்ந்து வாழ போகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் கூட கோபி மனசில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி ஏற்படவே இல்லை. ஏனென்றால் அவரும் இந்த தவறு தான் பாக்யாவிற்கு செய்திருக்கிறார்.

பாக்கியவுடன் வாழும் போதே ராதிகாவுடன் திருட்டுத்தனமாக வாழ்க்கை நடத்தி கல்யாணம் வரை முடிந்து விட்டது. அந்த வகையில் இதை பார்க்கும் பொழுது கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணி விட்டோமே என்று கொஞ்சமாவது உறுத்த வேண்டும். எது எப்படியோ பாக்கியாவின் ஒரு மகனின் வாழ்க்கை தற்போது சரியாக போகிறது.

Also read: பச்சோந்தியாக மாறிய ஜனனியின் தங்கை.. நிஜமாகவே எதிர்நீச்சல் இயக்குனர் ஜெயிலுக்கு போய்விட்டார் போல!

Trending News