செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சக்காளத்திக்கு போட்டியாக பாக்யா எடுக்கப் போகும் முடிவு.. குதுகலத்தில் லேம்ப்போஸ்ட், ராதிகா பிரசவத்தில் ட்விஸ்ட்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கமுக்கமாக இருந்து எல்லா தில்லாலங்கடியும் பார்த்த கோபி தற்போது குத்துதே குடையதே என்று புலம்புகிறார். அதாவது ராதிகா கர்ப்பம் என்று தெரிந்ததும் எப்படி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல என்ற தயக்கத்தில் கோபி தள்ளாடுகிறார்.

அதே மாதிரி ராதிகா அடிக்கடி வாந்தி எடுத்து தலை சுற்றுகிறது என்று சொல்லியதால் பாக்யாவிற்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இதற்கு இடையில் கோபி எப்படியாவது உண்மையை சொல்லலாம் என்று மகன்கள் இருக்கும் இடத்திற்கு போகிறார். ஏற்கனவே ஜெனி, செழியனை சந்தேகப்பட்டு அடிக்கடி குத்தி காட்டி பேசுவதால் மன உளைச்சலில் இருக்கிறார்.

அதே மாதிரி எழிலுக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று பாட்டி அடிக்கடி வற்புறுத்தி வருவதால் எழிலும் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். அங்கே வந்த கோபி எப்படியாவது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை சொல்லலாம் என்று மறைமுகமாக சில உதாரணங்களை சொல்லுகிறார்.

கல்யாணம் பண்ண போகும் பாக்யா

இதைக் கேட்ட கோபியின் மகன்கள் இது என்ன கண்றாவியாக இருக்கு வயசான காலத்துல யாராவது குழந்தை பெற்றெடுப்பார்களா என்று கேவலமாக பேசுகிறார்கள். இதைக் கேட்டதும் கோபி இப்பொழுது உண்மை சொல்ல வேண்டாம் என்று வாயை மூடிக்கொண்டு போய்விடுகிறார்.

இதனை அடுத்து ராதிகாவின் மகளுக்கும் உண்மை தெரிந்து விட்டது. அடுத்ததாக ராதிகாவின் நடவடிக்கைகளை பார்த்த பாக்யா நேரடியாக நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா ஆமாம் நான் டாக்டரை பார்த்து உறுதிப்படுத்தி விட்டேன். நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் என்று ராதிகா சொன்னதும் பேக்கு பாக்கியலட்சுமி அப்படியே அதிர்ச்சியாகி விடுகிறார்.

கோபி, பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை கல்யாணம் பண்ணும் போது கூட இந்த அளவிற்கு அதிர்ச்சியாக வில்லை. ஆனால் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னதும் பேரதிர்ச்சையாகி நிற்கிறார். ஏற்கனவே பாக்யாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்று பழனிச்சாமி ஆசைப்பட்டு வருகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி ராதிகா தற்போது கர்ப்பமாக இருப்பதால் இவருக்கு போட்டியாக பாக்யா பழனிச்சாமி உடன் சேரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒரு விஷயத்தால் கோபி வில்லனாக பார்க்கும் லேம்ப்போஸ்ட் அதாவது பழனிச்சாமி குதூகலமாக சந்தோஷப்பட போகிறார்.

இதனைத் தொடர்ந்து கடைசியில் ராதிகா குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது ஒரு ட்விஸ்ட்டாக கோபியின் குழந்தைக்கு பாக்கியா வளர்ப்புத் தாயாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எப்படி எல்லாம் கதையே மட்டமாக உருட்ட முடியுமோ அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி கதை கேவலமாக நகர்ந்து வருகிறது.

Trending News