வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோபியின் வக்கிர புத்தியை தெரிந்து கொண்ட பாக்யாவின் குடும்பம்.. அல்லல் படப்போகும் சைக்கோ

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஆனந்த் மூலமாக கோபி மீது கொடுத்த புகாரை விசாரிக்கும் விதமாக ராதிகா வீட்டிற்கு போலீஸ் வந்திருக்கிறார்கள். வந்ததும் பாக்கியா ஹோட்டலில் கலப்படம் செய்வதற்காக உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரணை பண்ண வேண்டும் என்று கோபியிடம் சொல்லி கூப்பிடுகிறார்கள்.

ஆனால் கோபி அதெல்லாம் என்னால் வர முடியாது, நான் யார் தெரியுமா என்று கெத்து காட்ட நினைக்கிறார். ஆனால் போலீஸ், நீங்கள் யாரா வேண்டுமானாலும் இருங்கள். கொடுத்த கம்ப்ளைன்ட்க்கு நாங்கள் விசாரிப்பது எங்களுடைய கடமை. நீங்கள் ஜிபில் வந்து ஏறுங்கள் என்று கோபியை கூட்டிட்டு போகிறார்கள். ஆனால் ராதிகா எதுவும் பேசாமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.

இருந்தாலும் ராதிகாவின் அம்மா, கோபியை போலீஸ் கூட்டிட்டு போகுது என்று பதட்டம் அடைந்து பின்னாடியே போகிறார். பிறகு இதையெல்லாம் பாக்யா அவருடைய வீட்டு வாசலில் கெத்தாக நின்னு பார்க்கிறார். அப்பொழுது அங்கே வந்த செழியன், கோபியை போலீஸ் கூட்டிட்டு போகிறார்கள் என்று தெரிந்ததும் என்ன என கேட்கப் போகிறார்.

அப்பொழுது ராதிகாவின் அம்மா உங்க அம்மா தான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார் என்று சொன்னதும், செழியன் பாக்கியாவிடம் என்னம்மா இப்படி பண்ணிட்ட என்று கேட்கிறார். ஆனால் பாக்யா எதுவும் சொல்லாத பட்சத்தில் வீட்டிற்குள் போய் ஈஸ்வரிடம் சொல்கிறார். பிறகு அனைவரும் வாசலில் வந்து நின்று பார்க்கிறார்கள். கோபி போலீஸ் ஜீப்பில் ஏறும் போது பின்னாடியே போயி செழியன் கெஞ்சுகிறார்.

பிறகு வீட்டிற்குள் போன பாக்கியாவிடம் செழியன் சண்டை போட்டு பேசுகிறார். ஈஸ்வரியும் நீ என்னதான் இருந்தாலும் கோபி மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கக் கூடாது. கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கு என்று சொல்கிறார். பிறகு இனியா, ஜெனி என அனைவரும் நடப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் இனியா மட்டும் அப்பா மீது ஏன் கம்ப்ளைன்ட் கொடுத்தாய் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் எழில் வந்ததும் அம்மா செஞ்சது தான் சரி என்று சொல்ல செழியனுக்கும் எழிலுக்கும் சண்டைகள் முத்திவிட்டது. பிறகு செழியன் உனக்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்ததே அப்பா தான், அது உனக்கு தெரியாது. அதான் இப்படி பேசுகிறாய் என்று சொல்கிறாய். உடனே எழில் எனக்கு எல்லாமே தெரியும், ஆனால் உனக்கு தெரியாத விஷயத்தை நான் சொல்லுகிறேன் அப்பா சான்சை வாங்கிக் கொடுத்துவிட்டு பட பூஜைக்கு அம்மாவை வரக்கூடாது என்று தயாரிப்பாளர் மூலம் என்னை லாக் பண்ணி விட்டார்.

நானும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அப்பாவிடம் போய் கெஞ்சினேன். ஆனால் அப்பா முடியவே முடியாது உன்னுடைய அம்மா பட பூஜையில் கலந்து கொள்ள கூடாது என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார் என கூறுகிறார். இது எல்லாத்தையும் கேட்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். அத்துடன் இனியாவும், அப்பாவா இப்படி சொன்னாங்க அப்படிப்பட்ட ஆளு கிடையாது என்று சொல்கிறார்.

கடைசியில் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வாக்குவாதம் சண்டைகள் வந்த நிலையில் பாக்கியா அனைவரையும் சமாதானப்படுத்தி பேசுகிறார். ஆனாலும் கோபி செய்த தவறுக்கு மொத்த குடும்பமும் சேர்ந்து பாக்யாவுக்கு சப்போர்ட் கொடுப்பார்களா அல்லது கோபி பக்கம் நிற்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் பாக்கியா செய்த ஒரு உருப்படியான விஷயம் என்றால் கோபியை ஜெயிலுக்கு அனுப்பியது தான்.

இனி ஒவ்வொரு நாளும் கோபி அவஸ்தைப்பட போகிறார். அதே மாதிரி ராதிகாவும், கோபியை அலட்சியப்படுத்தி விட்டார். இதுதான் கோபிக்கு சரியான தண்டனை என்பதற்கு ஏற்ப யாரும் இல்லாமல் தனியாக நின்று அல்லல் பட போகிறார்.

Trending News