திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாக்யாவை கதற விடும் வாரிசு.. ராதிகாவிற்கு எதிராக நடக்கும் கூட்டு சதி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்றுக் கொண்ட அப்பாவுடன் சேர்ந்து இருக்கும் இனியா கல்வி சுற்றுலாவிற்கு சென்றபோது அங்கு விபத்தில் சிக்கிக்கொண்டார். இதை அறிந்ததும் பாக்யா பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு செல்கிறார்.

அப்போது கோபி இனியாவை பள்ளியில் இருந்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இனியாவை பாக்யா பார்க்கத் துடிக்கிறார் என தெரிந்தும் கோபி இனியவை அவருடைய கண்ணில் கூட காட்டாமல் கூட்டிக்கொண்டு சென்று விட்டார்.

Also Read: விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

இதன் பிறகு கோபியின் வீட்டிற்கு சென்ற பாக்யா எப்படியாவது இனியவை பார்த்து விடலாம் என பார்க்கிறார். ஆனால் அப்போதும் கோபி இனியாவை அறைக்குள் வைத்து பூட்டி விடுகிறார். ‘தன்னை குடும்பத்தினரிடமிருந்து பிடித்ததால் அதற்கு பலிக்கு பழி வாங்குகிறேன்’ என்று கோபி மனசாட்சி இல்லாமல் பாக்யாவை பார்த்து கடுமையாக விமர்சிக்கிறார்.

அதன் பின் பாக்யா அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார். ‘இப்படி அம்மாவிடம் நடந்து கொள்ளலாமா? பாவம் இல்லையா!’ என இனியாவிடம் தாத்தா கேட்டபோது அப்பாவின் பேச்சை கேட்டால் தான் அப்பா தன்னுடன் வருவார் என்று இனியா தன்னுடைய மனதில் போட்ட வைத்திருந்த பிளானை உடைத்து கூறுகிறார்.

Also Read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இதை ராதிகாவும் மறைந்திருந்து கேட்கிறார். இப்பதான் இனியா ராதிகா வீட்டிற்கு வந்தகாரணம் என்ன என்பது புரிகிறது. விவாகரத்து ஆளப் பிறகு பாக்யா மற்றும் கோபி இருவரையும் சேர்த்து வைப்பதற்காகவே இனியா தற்போது தந்தையுடன் தங்கி இருக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட தாத்தா இனிமேல் இனியாயுடன் சேர்ந்து இந்த பிளானுக்கு ஒத்துழைக்கப் போகிறார். இப்படி பாக்யா குடும்பமே தனக்கு எதிராக செய்தும் கூட்டு சதியை புரிந்து கொண்டு இதைப் பற்றி கோபியிடமும் தெரியப்படுத்த ராதிகா கிளம்புகிறார். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான அதிரடி திருப்பம் ஏற்படுவதுடன் பாக்யாவை மட்டும் கதற விடுவது கொஞ்சம் பாவமாகவே இருக்கிறது.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம்கட்டிய புத்தம் புதிய சீரியல்

Trending News