வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மசாலா கடைத் திறக்கும் பாக்கியா.. திறந்து வைக்கப்போகும் விஜய்டிவி துரத்தி விட்ட ஜோடிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் ஆகும். இந்த சீரியலின் கதாநாயகி பாக்கியா தன் சொந்த முயற்சியில் ஒரு பிசினஸ் செய்து வருகிறார்.

அது சிறிது, சிறிதாக முன்னேறி தற்போது ஒரு பெரிய கடை திறக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அவரின் இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்து வரும் பாக்யாவின் இரண்டாவது மகன் எழில் தன் அம்மாவின் கடை திறப்பு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட நினைக்கிறார்.

இந்த நிகழ்வு விஜய் டிவியில் மூன்று மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாக்யாவின் கடை திறப்பு விழாவிற்கு எழில் நட்சத்திர தம்பதிகளான ரஞ்சித் மற்றும் பிரியா ராமனை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்.

இது ஒருபுறமிருக்க கோபியின் காதலியான ராதிகாவின் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரியா ராமன், ரஞ்சித் ஜோடி கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள செல்லும் பிரியா ராமன் மற்றும் ரஞ்சித்தை கோபி முதலில் ராதிகாவின் அலுவலக விழாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடுகிறார்.

இது எதுவும் அறியாத பாக்யாவின் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர்களின் வரவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்போது பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் இருவரும் யாருடைய நிகழ்ச்சியில் முதலாவதாக கலந்து கொள்வார்கள் என்ற எபிசோட் 3 மணி நேரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த ப்ரோமோ ரசிகர்கள் பலரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் நடித்து வந்த செந்தூரப்பூவே சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியை இந்த சிறப்பு நிகழ்ச்சியில் காண பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.

Trending News