ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஈஸ்வரி இனியாவுக்கு மொத்தமாக ஆப்பு வச்ச பாக்கியா.. பொண்டாட்டி சொல்லே மந்திரம் என நினைக்கும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவையும் மயூவையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்த கோபி எப்படியாவது ஈஸ்வரியும் சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக நெஞ்சுவலி வந்து போல் ஒரு ட்ராமாவை போட்டுவிட்டார். ஈஸ்வரியும் கோபிக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற பயத்தில் ராதிகா தங்குவதற்கு எந்தவித மறுப்பும் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டார்.

ஆனாலும் ராதிகா தங்குவது பிடிக்காத ஈஸ்வரி, பாக்யாவிடம் போய் சண்டை போடுகிறார். நீ தேவை இல்லாமல் பேசிய பேச்சால் தான் கோபி ராதிகாவை தேடி சமாதானப்படுத்தி இங்கே கூட்டிட்டு வந்திருக்கிறான். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று திட்டுகிறார். உடனே பாக்கியா, பொண்டாட்டி பிள்ளையுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் பெத்த அம்மா.

ஆனால் நீங்க ஏன் உங்க பிள்ளை ராதிகாவுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியவில்லை. அவங்க குடும்பம் அவங்க ஒன்னாதானே இருக்க முடியும் என்று ஈஸ்வரி மூஞ்சியில் கரியை பூசும் அளவிற்கு பேசிவிட்டார். அந்த இடத்திற்கு கோபி வந்து பாக்யா கிட்ட நன்றி சொல்கிறார்.

அதற்கு பாக்கியா நன்றி எல்லாம் எனக்கு தேவையில்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் இங்கே தங்குவதற்கு எனக்கு வாடகை வேண்டும் என்று சொல்லி ஒரு நாளைக்கு 1300 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கரராக சொல்லிவிட்டார். கோபியும் நான் தருகிறேன் என்று சொல்லி சந்தோஷமாக போய்விட்டார்.

ஆனால் இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி கொந்தளித்து போய் பாக்கியாவை பார்த்து நீ எப்படி என் பையனிடம் வாடகை கேட்பாய். கேட்கணும் என்றால் ராதிகாவிடம் கேட்க வேண்டியதுதானே என்று சண்டை போடுகிறார். அதற்கு ராதிகா இந்த வீடு நான் வாங்குவதற்கு அந்த நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு யாரிடமெல்லாம் பணம் கேட்டேன் என்று எனக்கு தான் தெரியும்.

அதனால் இந்த வீட்டில் என்ன முடிவெடுக்க வேண்டியதாக இருந்தாலும் நான் தான் எடுக்க முடியும். என் சம்பந்தப்பட்டவர்கள் இந்த வீட்டில் தங்கலாம், எனக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பவர்கள் தங்கினால் அவர்களிடம் வாடகை வாங்கினால் தான் சரியாக இருக்கும் என்று ஈஸ்வரி வாயைத் திறக்காத அளவிற்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார்.

அடுத்ததாக ராதிகா, ஈஸ்வரியின் ரூமில் கோபியின் டிரஸ்களை எடுத்துட்டு போக வருகிறார். ஆனால் ஈஸ்வரி என் பையன் என்னுடன் தான் இருப்பான். அவன் மாடிக்கு எல்லாம் வரமாட்டான் என்று சண்டை போடுகிறார். உடனே அங்கு வந்த கோபியிடம் உனக்கு எதுக்குமா தேவை இல்லாமல் சிரமம் நான் ராதிகாவுடன் இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு மயு எங்கே தங்குவா என்ற கேள்வி வரும்பொழுது கோபி, இனியா கூட தங்கிக் கொள்ளட்டும் என்று சொல்கிறார். ஆனால் இனியா, நான் அம்மாவுடன் தான் தங்குவேன். அந்த கட்டில் இரண்டு பேர் தான் தூங்க முடியும் என்று சொன்னதும் கோபி அப்படி என்றால் என் கூட மாடியில் மயூ தூங்கட்டும். நான் தரையில் படுத்து கொள்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி உனக்கு இப்பொழுது தான் ஆப்ரேஷன் முடிந்து இருக்கிறது. நீ எப்படி தரையில் படுக்க முடியும் என்று கேட்கும் பொழுது மயூ நான் ஹாலில் தூங்கிக் கொள்கிறேன் டாடி என்று சொல்கிறார். உடனே பாக்கியா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எழில் ரூம் இருக்கு அங்கே தங்கிக்கோ என்று சொல்கிறார்.

அதற்கு மயூ, நான் ரூமில் தனியாக தூங்க மாட்டேன் என்று சொல்கிறார். உடனே பாக்கியா அப்படி என்றால் உன்னுடன் நான் வந்து தூங்குகிறேன். நீயும் நானும் ஒரே ரூமில் இருக்கலாம் என்று சொன்னதும் இனியா அப்போ நான் தனியா தூங்கனுமா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா, நீதான அடிக்கடி எனக்கு ஒரு தனி ரூம் வேணும் என்று கேட்பாய்.

இப்பொழுது நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு தனி ரூம் கிடைத்திருக்கிறது போய் தூங்கு என்று சொல்லி இனியாவுக்கு மொத்தமாக ஆப்பு வச்சு விட்டார். அத்துடன் ராதிகா என்ன செஞ்சாலும் சரி என்று கோபியும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா என்ன சொன்னாலும் அதற்கும் அட்ஜஸ்ட் பண்ண தயாராகி விட்டார். தற்போது பொண்டாட்டிகள் சொல்வதே மந்திரம் என்பதற்கு ஏற்ப கோபி ரெண்டு பொண்டாட்டிகளின் பேச்சையும் கேட்டு வருகிறார்.

Trending News