சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாக்கியலட்சுமி சீரியலுக்கு பதிலாக வரும் புத்தம் புது சீரியல்.. விஜய் டிவி சீரியலுக்கு தாவிய எதிர்நீச்சல் ஹீரோயின்

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட 1200 எபிசோடுக்கு மேல் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது கிளைமாக்ஸ் கிட்ட நெருங்கி விட்டது. அந்த வகையில் தான் செய்த தவறுகளை புரிந்து கொண்ட கோபி திருந்தி வாழ்வதற்கு முயற்சி எடுத்து வருகிறார்.

ஆனால் ஈஸ்வரி பேச்சைக் கேட்டு ராதிகாவை உதாசீனப்படுத்திவிட்டு ஹாஸ்பிடலில் இருந்து பாக்கியா வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி போகிறார். இதனால் ராதிகா மற்றும் பாக்யாவின் நிலைமை என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் இன்னும் ஒரு சில வாரங்களில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.

அதற்கு பதிலாக விஜய் டிவியில் புத்தம் புது சீரியலை கொண்டு வரப் போகிறார்கள். ராம்குமார் இயக்கத்தில் அய்யனார் துணை என்ற புது நாடகம் வரப்போகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கும் நடிகை யார் என்றால் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மதிமிதா என்கிற ஜனனி.

இவர் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது என்னவென்றால் சந்தர்ப்ப சூழ்நிலையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக கூடிய விரைவில் புது சீரியலுடன் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

அதன்படி விஜய் டிவி சீரியலுக்கு தற்போது தாவி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் முன்னா என்கிற ஆக்டர் கமிட் ஆகி இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்து வரும் அய்யனார் துணை, விஜய் டிவியில் பிரேம் டைமில் ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது.

ரொம்ப நாளைக்கு பிறகு விஜய் டிவியில் புத்தம் புது சீரியலை கொண்டு வந்து டிஆர்பி ரேட்டிங்கில் மாஸ் காட்டப் போகிறது.

Trending News