தமிழ் சினிமாவில் மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பானு பிரியா. அதன் பிறகு அழகன், மகுடம், 3 மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் இவர் கண்ணிற்கு மட்டும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
பானுப்பிரியா மற்றும் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல இயக்குனர்களும் பானு பிரியாவை வைத்து படங்களை இயக்கினர். ஒவ்வொரு படத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
பானுப்பிரியா மற்றும் விஜயகாந்துக்கு இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரி படத்தில் முதலீடு செய்யும் அளவிற்கு இருந்ததாம். இதனால் விஜயகாந்தை வைத்து பானுப்பிரியா படம் ஒன்றை தயாரித்து உள்ளார், ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் வெளி வரவே இல்லையாம். இந்த சூழ்நிலையில் பெரும் நஷ்டம் அடைந்து பல சொத்துக்களை இழந்துள்ளார் பானுப்பிரியா.
பானுப்ரியா சினிமாவின் மூலம் தான் சம்பாதித்த வருமானத்தை தன் தம்பி விளம்பரப்படங்கள் தொழில் செய்வதாக கூறி பணம் பெற்று வந்துள்ளார். பின்பு தொழிலில் பெரிய அளவில் வெற்றி பெறாததால் நஷ்டம் அடைந்தனர். அதன்பிறகு பானுப்பிரியா சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
இவரது நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அதன் பிறகு கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் வரவேற்பைப் பெற்றார். தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.