செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Anna: மாமியாருக்காக எரிமலையாக வெடிக்கும் பரணி.. ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அண்ணா

Anna Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற அண்ணா சீரியலில், சண்முகம் தன்னுடைய தங்கைகளுக்கு அம்மா அப்பா போல் இருந்து அனைத்து சேவைகளையும் பண்ணி வருகிறார். இதற்கு இடையில் இவருக்கு பரணி மீது ஏற்பட்ட காதல் பல சூழ்ச்சிகளுக்கு நடுவில் கல்யாணத்தில் போய் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் பரணிக்கு சண்முகத்தின் மீது கோபம் இருந்தாலும் போகப் போக அவர் மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்து கொண்டார்.

தற்போது சண்முகத்துக்காகவும் அந்த குடும்பத்திற்காகவும் ஒரு நல்ல மருமகளாகவும் மனைவியாகவும் மாறிவிட்டார். இதில் பரணியின் அப்பா மூலம் வரும் பிரச்சனைகளுக்கு ஒரு காவல் தெய்வமாக இருந்து சண்முகம் தங்கைகளை பார்த்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சண்முகத்தின் அம்மா ஜெயிலுக்குப் போன காரணம் என்னவென்று தற்போது பரணிக்கு தெரிந்து விட்டது.

ஆவேசமாக மாறிய பரணி

அதாவது பல வருடங்களுக்கு முன் கோவிலுக்கு சொந்தமான பொருளை பரணியின் அப்பாவாக இருக்கும் சௌந்தர பாண்டியன் திருடிவிட்டார். ஆனால் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சண்முகத்தின் அம்மாவிடம் எனக்கு பதிலாக நீ ஜெயிலுக்கு போ. உன் குடும்பத்தை நான் கடைசிவரை பாதுகாத்துக் கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.

அதை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் சண்முகத்தின் அம்மா கோர்ட்டில் எந்தவித உண்மையும் சொல்லாமல் பல வருடங்களாக தண்டனை அனுபவித்து இருக்கிறார். தற்போது இந்த விஷயம் பரணிக்கு தெரிந்து விட்டது. இந்த சூழலில் அப்பா செய்தது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனை நான் அவருக்கு நிச்சயமாக வாங்கிக் கொடுப்பேன். உங்களையும் இந்த அவப்பெயரிலிருந்து காப்பாற்றுவேன் என்று சொல்லி எரிமலையாக வெடிக்கப் போகிறார்.

இதற்கிடையில் தங்கைக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் சண்முகம் பாதுகாத்து வருகிறார். தற்போது சௌந்தர பாண்டியனுக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பித்துவிட்டது. அதுவும் மாமியாருக்காக அப்பாவிற்கு எதிராக மாறும் பரணியின் ஆவேசம் பார்ப்பதற்கு வெறித்தனமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சண்முகம் மற்றும் பரணி இருவரும் சேர்ந்து சௌந்தர பாண்டியனுக்கு மிகப்பெரிய ஆப்பை வைக்கப் போகிறார்கள்.

Trending News