சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

தனுஷ் மற்றும் ஜீவாவின் சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட பரத்.. இதுல நடிச்சிருந்தா எங்கேயோ போய் இருப்பார்.!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஐந்து இளைஞர்களில் ஒருவராக நடித்தவர் தான் நடிகர் பரத். இருப்பினும் இப்படம் இவருக்கு பெரிய அளவிலான அடையாளத்தை வழங்கவில்லை. இதனையடுத்து இவர் நாயகனாக நடித்து வெளியான காதல் படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்தது.

இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். காதலின் எதார்த்தத்தை இப்படம் தெள்ளத்தெளிவாக காட்டியிருந்தது. அதனாலோ என்னவோ இப்படம் பல நாட்கள் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பரத் வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து வெயில், பட்டியல், எம்டன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். எப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தொடர்ந்து இவரது படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த பரத், தன்னுடைய விடாமுயற்சியால் புது புது கதைகளத்துடன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

bharath-cinemapettai
bharath-cinemapettai

அந்த வகையில் தற்போது நடிகர் பரத் இயக்குனர் சரண் குமார் இயக்கத்தில் நடித்துள்ள நடுவன் படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், பாலா உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து பரத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அப்போது பரத்திடம் அவர் தவறவிட்ட படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பரத்,   என்னை அறியாமல் நான் இரண்டு படங்களை தவற விட்டேன். அது திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் கோ. திருவிளையாடல் ஆரம்பம் படத்தை பற்றி இயக்குனர் என்னிடம் சொல்லும்போது என்னால் அந்த கதையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. படம் எப்படி வரும் என்று ஏதோ ஒரு காரணத்தினால் அந்த படத்தை தவற விட்டேன். ஆனால், தனுஷ் அந்த படத்தில் நன்றாக நடித்திருந்தார்.

அதேபோல் கோ படமும் நான் பண்ண வேண்டியது. எனக்கே தெரியாமல் என் கையை விட்டுப்போன படம். என்னை முதன்முதலில் கேமராவில் காண்பித்த கே.வி.ஆனந்த் சார் இயக்கிய கோ படம் எனக்கு கிடைக்கவில்லை என்று நான் இரண்டு, மூன்று நாட்கள் தூங்க கூடவில்லை. நமக்கு எழுத பட்டதை யாராலும் மாற்ற முடியாது என கூறினார்.

- Advertisement -spot_img

Trending News