பாய்ஸ் திரைப்படம் மூலமாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் பரத். அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். காதல் திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து வெயில், பட்டியல், நேபாளி, கூடல்நகர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின் சிறிய இடைவேளைக்குப் பிறகு பரத்தின் காளிதாஸ் திரைப்படம் அவருக்கு மற்றுமொரு முக்கிய திரைப்படமாக அமைந்திருந்தது.
இதையடுத்து இப்போது பரத் நடிப்பில் எட்டு, நடுவண் உள்ளிட்ட படங்களும் மேலும் பாலிவுட்டில் சல்மான்கானுடன் இணைந்து ராதே மற்றும் இரண்டு மலையாள படங்களிலும் பிசியாக இருந்து வருகிறார்.
தற்போது சரண் குமார் இயக்கத்தில் நடுவன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பரத்திற்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடிக்கிறார். கோகுல் ஆனந்த், சார்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
நடுவன் திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளது. நடுத்தர வகுப்பை (மிடில்கிளாஸ்) சேர்ந்த இளைஞரின் வாழ்க்கை பற்றிய கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
மேலும் நடுத்தர சமுதாயத்தின் வஞ்சகம், ஏமாற்றுத்தனம் போன்றவற்றை எதிர்கொண்டு எவ்வாறு அந்த இளைஞர் வெற்றி கொள்கிறார், என்பதே படத்தின் முக்கிய கருவாகும்.