வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

திருமண நாளில் மட்டமான பரிசளித்த பாரதி.. மீண்டும் விஷமாக மாறும் வெண்பா!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி, கண்ணம்மாவை நிரந்தரமாக பிரியும் நோக்கத்தில் ஆறுமாதம் கோர்ட் சொன்ன உத்தரவின்படி ஒரே வீட்டில் வாழத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் சௌந்தர்யா, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைக்கும் நோக்கத்தில் பல்வேறு திட்டத்தை அரங்கேற்றுகிறார்.

அந்த வகையில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் திருமண நாள் கொண்டாட ஏற்பாடுகளை அவர்களுக்குத் தெரியாமலே செய்துகொண்டிருக்கிறார். ஆனால் பாரதியிடம் குடும்பத்தில் ஏதோ ஒரு பூஜை நடத்துவதாக சொல்லி இருவருக்கும் துணி எடுப்பதற்காக ஜவுளிக்கடை சென்றுள்ளனர். அங்கு பாரதியைக் கண்ணம்மாவிற்கு சேலை தேர்வு செய்ய வேண்டும் என சௌந்தர்யா கூட, அதில் சிறிதும் உடன்பாடில்லாத பாரதி, கண்ணம்மாவிற்கு மட்டமான சேலை ஒன்றை எடுத்துக் கொடுக்கிறார்.

அந்த சமயத்தில் திடீரென்று அந்த கடைக்கு நீதிபதி வந்துவிடுகிறார். அந்த நீதிபதி அவருடைய மருமகளின் பிறந்தநாளுக்கு சேலை எடுத்து தருவதற்காக கடைக்கு வந்திருப்பதாக பாரதி-கண்ணம்மா இருவரிடமும் விளக்கம் அளிக்கிறார். அதன் பிறகு பாரதி-கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ்கிறார்களா? என்பதைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு தெரியாமலே வீட்டிற்கு வருவதாகவும் சொல்கிறார்.

அதன் பிறகு பாரதி தனியே சென்று வில்லி வெண்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த நீதிபதி, யாரினும் பேசுகிறீர்கள்? என்று கேட்க, இது அவ்வளவு முக்கியமான நபர் அல்ல என்று பதில் அளிக்கிறார். முக்கியமில்லாத நபர் இல்லை என்றால், ஏன் தனியாக இவ்வளவு நேரம் செலவிட்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீதிபதி காரசாரமான கேள்விகளை அடுத்தடுத்து எடுத்து வைக்கிறார்.

அதன்பிறகு பாரதி போனை கட் செய்துவிடுகிறார். ஆனால் நீதிபதி பேசியதை வெண்பா கேட்டுவிட, இனி வரும் நாட்களில் அவருடைய விஷமத்தனத்தை காட்ட வெண்பா ஆத்திரத்துடன் கொந்தளிக்கிறார். மேலும் சௌந்தர்யா, கண்ணம்மா மற்றும் பாரதி இருவரையும் அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்று திருமண நாள் கொண்டாட்டத்தை குழந்தைகளுடன் கொண்டாட உள்ளனர்.

எனவே இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா-பாரதி இருவரின் திருமண நாள் கொண்டாட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Trending News