விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாரதி குடித்துவிட்டு கண்ணம்மா வீட்டில் வாந்தி எடுத்து விடுகிறார். கண்ணம்மா அவற்றை சுத்தம் செய்யாமல் பாரதியை பெட்ரூமில் படுக்க வைத்து உள்ளார். விடிந்தவுடன் பாரதி எழுந்து வெளியே வருகிறார்.
கண்ணம்மா மூக்கில் துணி வைத்து மறைத்து அமர்ந்து கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்த பாரதி என்ன இவளுக்கு கொரானாவா மாஸ்க் வேண்டுமே என கூறுகிறார். என்ன ஒரே நாத்தம் அடிக்குது என்று பாரதி சொல்ல உடனே கண்ணம்மா நாரதானு தேடுறீங்களா, என்ன நாத்தம் கூட தெரியலையா அங்க பாருங்க நீங்க எடுத்த வாந்தி என காட்டுகிறார்.
பிறகு, பாரதி அதை எதுக்கு இன்னும் கிளீன் பண்ணாம வச்சிருக்க, க்ளீன் பண்ண வேண்டியதுதானே என கேட்கிறார். எப்படி நீங்க கண்ட இடத்துக்குப் போய் கண்டதை குடிச்சுட்டு வந்து நடுவீட்டில் வாந்தி எடுத்தா அதை நான் கிளீன் பண்ணனுமா, அதுமட்டுமில்லாமல் நீங்கதான சொன்னீங்க நான் சமையல்காரி மட்டும் தானே அப்ப நான் எதுக்கு கிளீன் பண்ணனும் என கண்ணம்மா கேட்கிறார்.
குடிச்சுட்டு வந்து வாந்தி எடுக்கத் தெரியுது இல்ல போய் கிளீன் பண்ணுங்க என கண்ணம்மா சொல்ல என்னது நான் கிளீன் பண்ணனுமா, தெருவுல காசு கொடுத்தா கிளீன் பண்றதுக்கு ஆயிரம் பேர் வருவாங்க என பாரதி கூறுகிறார். நீங்க வாந்தி எடுத்ததை கிளீன் பண்ண வருவாங்களா, போய் கூப்புட்டு பாரு இங்க யாரும் வரமாட்டாங்க என கண்ணம்மா கூறுகிறார்.
என்ன நீங்க உங்களுடைய வீட்டுக்காரியா தான் பார்க்கிறேன் என்று சொல்லுங்க நான் சுத்தம் செய்கிறேன் என்று கண்ணம்மா சொல்ல பாரதி நானே அந்த வேலையை செஞ்சுகிறேன் என வீட்டை சுத்தம் செய்ய தொடங்குகிறார். உடனே கண்ணம்மா இங்க இருக்கு பாருங்க, அங்க இருக்கு பாருங்க அதை துடைங்க, இதைத் துடைங்க என பாரதியை வருத்து எடுக்கிறார்.
குடித்துவிட்டு அதிகாரம் செய்யலாமென்று வந்த பாரதிக்கு கண்ணம்மா வேலை வாங்கி வெளுத்து வாங்கிவிட்டார். படித்த டாக்டரே இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.