திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மீண்டும் சிங்க பெண்ணாக மாறிய பாரதி கண்ணம்மா.. புல்லரிக்க வைத்த வீடியோ!

விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியலில் பெருவாரியான காட்சிகள் தமிழ் சினிமாவில் உள்ள பல படங்களில் அட்ட காப்பி அடித்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் அசுரத்தனமான நடிப்பை ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்தது காரணமாக பாரதிகண்ணம்மா சீரியல் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

அதிலும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த நடிகையின் நடிப்பு பெரிய அளவு ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார். அதாவது விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியல்ன் புரோமோ ஒவ்வொன்றிலும் ரோஷினி ஹரி பிரியனின் கண்ணசைவு நடிப்பு தான் அதற்கு காரணம்

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் தினமும் ஏதாவது ஒரு படத்திலிருந்து காட்சியை எடுத்து சீரியலில் வைத்துவிடுவார். ஆனால் தற்போது விஜய் நடிப்பில் வெளியான பீகிள் திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலையும், ஸ்பைடர் படத்தில் பெண்கள் வீரமாணவர்கள் என்பது போல் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் காட்சி வைத்திருப்பார்.

அதனை அப்படியே சுட்டு பாரதிகண்ணம்மா சீரியல் காட்சிகளை எடுத்துள்ளார் இயக்குனர் நவீன் தற்போது இந்த ப்ரோமோ வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமாக இயக்குனரை கிண்டலும், விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் இந்த மாதிரியான காட்சியை பார்க்கும் போது ஒவ்வொருக்கும் கடுப்பு தான் வரும் எனவும். தயவுசெய்து சீரியல் எடுங்கள் ஆனால் இப்படி மாதிரியான காட்சிகளை எடுக்காதீர்கள் என இயக்குனருக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் ஒருசில ரசிகர்கள் தங்களது கமெண்ட் பாக்ஸில் சீரியல் பற்றிய விமர்சனமும், இயக்குனரின் திறமையையும் நாசுக்காக கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News