வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நிஷா அக்காவால் கட்டிலில் கண்ணம்மாவை புரட்டிய பாரதி.. என்னடா நடக்குது இங்க

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சுவாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடரில் தற்போது கண்ணம்மாவுடன் தங்கி இருக்கும் பாரதி, இன்னும் 3 நாட்களில் அந்த வீட்டை விட்டு கிளம்பிவிடுவதாக மிரட்டி கொண்டிருக்கிறார். ஏற்கனவே கண்ணம்மாவுடன் 3 நாட்கள் தங்கி இருந்த பாரதிக்கு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இன்று பாரதிகண்ணம்மா தொடரில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. கண்ணம்மாவின் கீழ் வீட்டில் குடியிருக்கும் வாய்தா வடிவுக்கரசி வீட்டிற்கு உறவினர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் வாய்தா வடிவுகரசி வீட்டில் தங்கவைக்க முடியாததால் கண்ணம்மாவிடம் உதவி கேட்கிறாள்.

கண்ணம்மா உறவினர்களை வீட்டில் தங்க மறுத்த நிலையில் வாய்தா வடிவரசி ஜட்ஜ் அம்மாவுக்கு போன் செய்வேன் என்று சொன்னவுடன் பாரதி உடனே சம்மதிக்கிறார். இதனால் ஹாலில் படுத்திருக்கும் பாரதி, கண்ணம்மா உடன் படுக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தலையணையை அடிக்கி வைக்கிறார் பாரதி.

கண்ணம்மாவை நடுராத்திரியில் புரண்டு, கிரண்டு படுக்குறேன் மேல கையை போட்ட அவ்வளவுதான் என கண்டித்த பாரதி தூக்கக்கலக்கத்தில் தலையணையை தள்ளிவிட்டு கண்ணம்மா மேல் கைபோட்டு உறங்குகிறார். கண்விழித்து பார்த்த பாரதி அதிர்ச்சியடைந்து மீண்டும் தனியாகபடுக்கிறார்.

கண்ணம்மா புரண்டு படுக்கும் போது பாரதி மேல் கைபடுகிறது. உடனே விழித்துப் பார்த்த கண்ணம்மா பாரதியை இன்னும் நெருக்கமாக பிடித்துக் கொள்கிறார். இந்தப் புரோமோவில் மௌனராகம் இப்படத்தில் இடம்பெற்ற தாமரை மேலே பாடல் வரிகள் ஒலிக்கிறது.

இதைப்பார்த்த பாரதிகண்ணம்மா ரசிகர்கள் இதுக்கு தானே இத்தனை நாள் காத்து இருந்தோம் என கூறி வருகிறார்கள். ஆனால் இது இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Trending News