புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்தா கண்ணம்மா.. வெளியான படப்பிடிப்பு புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா. இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், டிஆர்பி-லும் முன்னிலை வகிக்கிறது.

அத்தகைய பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைத்ததால் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலக உள்ளார்.

எனவே இவருடைய கடைசி நாள் ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி அவர்களை சுற்றி கேமரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ரோஷினி பாரதிகண்ணம்மா சீரியலிருந்து விலகிய பிறகு, அவருக்கு பதில் ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை நட்சத்திரா மற்றும் டிக் டாக் மாடல் வினுஷாதேவி இவர்கள் இருவரில் ஒருவர் தான் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா வாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

kannamma-cinemapettai9
kannamma-cinemapettai9

மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உரிய, நிறைய படப்பிடிப்புகளை ரோஷினி நடித்துக் கொடுத்து விட்டதால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு ரோஷினி தான் கண்ணம்மாவாக சீரியலில் காண்பிக்கபடுவார்.

அதன்பிறகுதான் ‘இவருக்கு பதில் இவர்’ என்று சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தின் நடிகை மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News