சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கிளைமாக்ஸ் நோக்கி பாரதி கண்ணம்மா.. படையப்பா நீலாம்பரி ரேஞ்சுக்கு சவால் விடும் வெண்பா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த கதையை ஜவ்வாக இயக்குனர் இழுத்து வருகிறார்.

எப்போதுதான் பாரதிக்கு தன் மகள்கள் தான் லட்சுமி, ஹேமா என்பது புரிய வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் அளவுக்கு வெண்பாவின் சதியால் பலமுறை பாரதி முட்டாள் ஆகவே இருந்துள்ளார். இதனால் இந்த தொடரை பார்ப்பதையே சிலர் நிறுத்திவிட்டார்கள்.

Also Read :எகிறிய சன், விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்.. நீண்ட நாட்களுக்கு பின் விட்ட இடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா

இந்த சூழலில் தற்போது வெண்பாவின் சுயரூபத்தை அறிந்த பாரதி தற்போது அவரை வெறுத்து ஒதுக்கி உள்ளார். மேலும் வெண்பாவிற்கு ரோகித்துடன் திருமணம் நடந்துள்ளது. ஆனாலும் பாரதியை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காக தன்னுடைய கருவில் உள்ள குழந்தையை கலைக்கும் அளவுக்கு கொடுமையான பெண்ணாக மாறி உள்ளார் வெண்பா.

இந்நிலையில் பாரதியின் செயலைக் கண்டு அவர் மீது மிகுந்த கோபமாக இருக்கும் ஹேமா தன்னை அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து விடுமாறு கண்ணம்மா, பாரதி என எல்லோரும், முன்னிலையிலும் கதறி அழுகிறார். இதைப் பார்த்து உடைந்து போகும் கண்ணம்மா ஹேமாவிடம் எல்லா உண்மையும் சொல்ல முற்படுகிறார்.

Also Read :உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா.. கதி கலங்கி போய் நிற்கும் பாரதி குடும்பம்

அப்போது சௌந்தர்யா தடுத்தாலும் அதையும் மீறி கண்ணம்மா உண்மையை போட்ட உடைக்கிறார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடையும் ஹேமா இனி கண்ணம்மா உடன் இருப்பதாக சென்று விட உள்ளார். இதனால் பாரதி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதைத்தொடர்ந்து பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட் வருகிறது.

இதை பார்த்து உண்மையை அறிந்த பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் இணைகிறார். இதை அறிந்த வெண்பா உச்சகட்ட கோபத்தில் படையப்பா நீலாம்பரி போல் பாரதி குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறார். வெண்பாவின் இந்த வெளி தான் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடராக ஒளிபரப்பாக உள்ளது.

Also Read :இந்த வாரம் சுடசுட ரெடியான நாமினேஷன் லிஸ்ட்.. 10 பேரில் கமுக்கமா மிச்சர் தின்னுட்டு வெளியேறும் அந்த நபர்

Trending News