வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கோபத்தின் உச்சியில் இருக்கும் பாரதி.. அடுத்த அஸ்திரத்தை கையிலெடுக்கும் வெண்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக பாரதி, கண்ணம்மா இருவருக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் அவர்கள் இருவரும் பழைய மாதிரி அவரவர் வீட்டில் பிரிந்து இருக்கின்றனர். இந்தக் குழப்பத்தில் இருக்கும் பாரதிக்கு, வெண்பா போன் செய்கிறார். தன் மேல் கோபமாக இருக்கும் பாரதியிடம் வெண்பா மன்னிப்பு கேட்டு பேசுகிறார்.

பாரதியோ, வெண்பாவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் நீ ஒரு பெரிய துரோகி, சாகும் வரைக்கும் என் முகத்தில் விழிக்காதே என்று கோபமாக சொல்கிறார். இதை எதிர்பார்க்காத வெண்பா பாரதியை மீண்டும் மீண்டும் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.

ஆனாலும் கோபமாக இருக்கும் பாரதியிடம், வெண்பா அஞ்சலி விஷயத்தில் நான் செய்தது தவறுதான், அதற்காக என்னை மன்னித்துவிடு, எனக்குன்னு இங்க யாருமே கிடையாது, உனக்காகத்தான் நான் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தேன் என்று சென்டிமென்டாக பேசுகிறார்.

அதற்கு பாரதி நீ என்ன சொன்னாலும் நான் உன்னை மன்னிக்க மாட்டேன், என் காலில் விழுந்து கெஞ்சினாலும் மன்னிக்க மாட்டேன் என்று சொல்கிறார். இதனால் பாரதியை சமாதானப்படுத்த வெண்பா நீ என்னை மன்னிக்கவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று சொல்கிறார்.

அதற்கு பாரதி செத்துத் தொலை என்று சொல்கிறார். இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காத வெண்பா அதிர்ந்து நிற்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் நாட்களில் இதுபோன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பெண்பா பாரதியை மிரட்டுவதற்காக தற்கொலை செய்வது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறார்.

மேலும் வெண்பா தூக்கிட்டு கொள்வது போன்ற சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. வெண்பாவின் இந்த அதிரடி காட்சிகளால் பாரதிகண்ணம்மா சீரியல் இன்னும் விறுவிறுப்புடன் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News