புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு.. பாரதிகண்ணம்மா வெண்பா வெளியிட்ட பதிவு

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடித்து வருகிறார். கண்ணம்மாவின் மேல் கொண்ட சந்தேகத்தினால் பாரதி, கண்ணம்மா இருவரும் பல வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

அவர்களுக்கு லட்சுமி மற்றும் ஹேமா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் லக்ஷ்மி தன் தாயான கண்ணம்மாவிடம் வளர்கிறாள். ஹேமாவும் தன் குழந்தை தான் என்று தெரியாத பாரதி அக்குழந்தையை தன் வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார். சமீபத்தில்தான் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர் என கண்ணம்மாவிற்கு தெரிய வருகிறது.

பாரதி, கண்ணம்மா பிரிவுக்கு காரணமான வெண்பா தற்போது குழந்தையை கடத்தி வைத்திருப்பதாக கண்ணம்மாவை மிரட்டுகிறார். தன் குழந்தையை மீட்க போராடும் கண்ணம்மா ஒரு சந்தர்ப்பத்தில் பாரதியின் உதவியை நாடுகிறாள் இப்படியாக கதை செல்கிறது.

இந்த சீரியலின் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் பரீனா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். சமீபத்தில் தான் அவருக்கு மிகவும் கோலாகலமாக வளைகாப்பு நடந்தது. அதில் பாரதி, கண்ணம்மா மற்றும் விஜய் டிவியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

பரினா சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்பொழுது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடியுள்ளார் அதில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கும் அவர் சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் வயிற்றில் குழந்தையுடன் நடிப்பது உங்களுக்கு சிரமமாக இல்லையா என்று கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த பரினா பாரதிகண்ணம்மா சீரியலில் குறுகலான பாதை ஒன்றில் வேகமாக நடந்து செல்வது போன்ற காட்சிகள் சற்று சிரமமாக இருந்தது ஆனால் நானும் கண்ணம்மாவும் அதை எப்படியோ சமாளித்தோம் என்று பதிலளித்துள்ளார்.

venba
venba

மற்றொரு ரசிகர்  நீங்கள் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு எது? என்ற கேள்விக்கு “நாச்சியார்புரம்” என்று பதிலளித்துள்ளார். நாச்சியார்புரம் என்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நட்சத்திர தம்பதிகளான தினேஷ் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் ஆரம்பித்த வேகத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பரினா இந்த சீரியலை பற்றி வேறு எந்த விளக்கமும் தரவில்லை.

சந்தோஷமான மனநிலையும், பாசிட்டிவான எண்ணங்களும் தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள பரினா  நவம்பர் மாதத்தில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளது என்ற தகவலையும் கூறியுள்ளார்.

Trending News