செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கண்ணம்மா நெத்தி பொட்டில் துப்பாக்கி.. எதிர்பாராத ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரபலமான தொடர்களின் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்துள்ளனர். இதில் பாரதியை தனியாக அடைத்து வைத்து தீவிரவாதிகள் சித்திரவதை செய்து வருகின்றனர்.

மறுபுறம் தீவிரவாதிகளில் ஒருவர் அங்குள்ள சில பெண்களை சீரழித்து விட்டார். இதை அறிந்த கண்ணம்மா கழிவறைக்கு செல்லும் போது அந்த நபர் கண்ணம்மாவிடமும் தப்பாக நடக்க முயற்சிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா அங்குள்ள கத்தியால் அவரைக் குத்தி சாகடிக்கிறார்.

Also Read :ஏமாந்துபோன பிக் பாஸ் ஜூலி.. மேடையில் கண்ணீர் விட்டு கதறல்

அதன் பின்பு அந்த தீவிரவாதிகளுக்கு நம்மில் ஒருவர் இறந்துவிட்ட செய்தி தெரிகிறது. அவரை யார் கொன்றார்கள் என்று கேட்கும் போது கண்ணம்மா நான் தான் கொன்றேன் என்று உண்மை ஒத்துக்கொள்கிறார். அப்போது உங்கள் தோழர் இங்கு ஆறு பெண்களை சீரழித்து விட்டார் என்ற உண்மையை கூறுகிறார்.

ஆனால் தீவிரவாதியின் தலைவன் இதை ஏற்க மறுத்து கண்ணம்மாவை கொல்ல முயற்சி செய்கிறார். கண்ணம்மாவின் நெத்தி பொட்டில் தீவிரவாதி துப்பாக்கியை வைத்து சுட முயற்சி செய்யும்போது தீவிரவாதிகளில் உள்ள பெண் ஒருவர் கண்ணம்மா சொல்வது உண்மைதான் என்று கூறுகிறார்.

Also Read :2ம் திருமணத்திற்கு அம்மாவை அழைத்த கோபி.. யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

ஆம் சகோ அவன் தப்பானவன், நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதி தலைவன் மீண்டும் சென்று கண்ணம்மா குத்து கிழித்தவனை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் வெளியில் யாரை கொன்றார்கள் என்ற பதட்டம் நிலவுகிறது.

அப்போது தீவிரவாதி தலைவன் போலீஸ் அதிகாரிகளிடம் எங்களில் ஒருவரை தான் சுட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளேன் என கூறுகிறார். அவன் பெண்களை சீரழித்ததால் கொன்று விட்டேன் என்று சொல்கிறார். என்னதான் இவர்கள் தீவிரவாதியாக இருந்தாலும் சில விஷயங்களில் கண்ணியம், கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள்.

Also Read :ஏஜென்ட் டீனா அளவுக்கு குத்திக் கிழித்த கண்ணம்மா.. இது என்னட விக்ரம் படத்திற்கு வந்த சோதனை

Trending News