வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாரதி.. அய்யயோ! இனி கண்ணம்மா பெட்டி படுக்கையை தூக்கிக்கிட்டு ஊரு ஊரா நடப்பாரே

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாள் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து இழுத்தடித்த நிலையில், இப்போது அந்த ரிப்போர்ட்டை கையில் வாங்கிய பாரதிக்கு கண்ணம்மாவின் இரண்டு குழந்தைகளும் தனக்கு பிறந்தது தான் என்ற உண்மை தெரிந்து வருகிறது.

இதைப் பார்த்ததும் கலங்கி போன பாரதி, இவ்வளவு நாள் கண்ணம்மாவை சித்திரவதை செய்ததை நினைத்து அழுது புலம்புகிறார். இதன்பிறகு ஊருக்கு திரும்பும் பாரதிக்கு ஹேமா தற்கொலை முயற்சி செய்வது தெரிய வருகிறது.

Also Read: டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

அவர் தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இப்படி செய்வதை அறிந்த பாரதி, அனைவரின் முன்னிலையிலும் ‘உன்னுடைய அப்பா நான் தான். கண்ணம்மாவை தாலி கட்டிய கணவரும் நான்தான்’ என்ற உண்மையை உடைத்து கூறுகிறார்.

அதன் பிறகு மொட்டை மாடியில் தற்கொலைக்கு முயற்சித்த ஹேமா கீழே இறங்கி வருகிறார். அதன்பின் அனைவரிடமும் ஹேமா மற்றும் லஷ்மி இருவருக்கும் தனக்கும் டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்ததாகவும், அதில் அவர்கள் இருவரும் தனக்குப் பிறந்த குழந்தைகள்தான் என்று உண்மை தெரிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார்.

Also Read: அசீமை படுகேவலமாக திட்டிய ஆண்டவர்.. காரசாரமான பிக்பாஸ் மேடை

மேலும் கண்ணம்மாவிடம் தன்னுடைய பார்வையாலே மன்னிப்பும் கேட்கிறார். இருப்பினும் 10 வருடங்களாக சந்தேகப்பட்டு குற்றவாளியாக பார்த்த கணவரை உடனே கண்ணம்மா ஏற்றுக்கொள்ள மாட்டார். இதன்பின் தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு மறுபடியும் பெட்டி படுக்கையை தூக்கிக்கிட்டு ஊரு ஊரா நடக்க கிளம்பிடு வாரே!.

அப்படிதான் இந்த சீரியலின் இயக்குனரும் இனிமேலும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேரவிடாமல் இழுத்தடிப்பார். இதையெல்லாம் பார்க்கும் சின்னத்திரை ரசிகர்களும் இந்த சீரியலுக்கு ஒரு முடிவு வராதா கடவுளே என்றும் சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: திருமணமாகாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை.. 18 வயதில் வந்த கனவை நிஜமாக்கிய பிரியா பவானி சங்கர்

Trending News