புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே வருடத்தில் கணவனை இழந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.. மரண பயத்தை காட்டிய காரணம்

Bharathikannamma Serial Actress: சமீப காலமாகவே பிரபலங்களின் மரணம் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. அதிலும் செம க்யூட்டாக இருக்கக்கூடிய நடிகை ஒருவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய கணவருடன் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வந்தார். அம்சமாக இருந்த அந்த காதல் ஜோடியின் ஒத்துமொத்த சந்தோசத்தையும், கணவரின் மரணம் சுக்கு நூறாக உடைத்து விட்டது.

நாதஸ்வரம், வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதிகண்ணம்மா போன்ற சீரியலில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருடைய கணவர் அரவிந்த் சேகர் திருமணமான ஒரே வருடத்தில் உயிரிழந்த சம்பவம் தற்போது ரசிகர்களை உலுக்கி இருக்கிறது.

Also Read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

இவர் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் சௌந்தர்யாவின் மகளாக செம போல்டான கேரக்டரில் நடித்திருந்தார். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் கல்லூரி படிக்கும் போதே சின்னத்திரையில் அறிமுகமான இவர், சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டி தூக்கிய அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் இரு வீட்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக பல பிரபலங்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்த வந்த இவர், திருமணத்திற்கு பின்பு சுத்தமாகவே சீரியலில் நடிப்பதை தவிர்த்து முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

Also Read: எதிர்நீச்சலை காலி பண்ண விஜய் டிவி போட்ட பலே திட்டம்.. முக்கிய கேரக்டரை தூக்க நடந்த சதி

ஆனால் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அரவிந்த் சேகருக்கு 30 வயதே இருக்கும் நிலையில், இவருடைய மரணம் பலருக்கும் சாவு பயத்தை காட்டி இருக்கிறது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது நிஜம் தான். ஆனால் இப்போது 30 வயதெல்லாம் சாகக்கூடிய வயசா! என்று சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அரவிந்த் சேகரின் மரணத்தை குறித்து ஆதங்கப்படுகின்றனர். அத்துடன் ஸ்ருதிக்கும் தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர்.

Also Read: சைக்கோவிடம் டீல் பேசும் குணசேகரன்.. புரியாத புதிராக இருக்கும் ஜீவானந்தம்

Trending News