வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அக்கானு கூப்பிட்டு அசிங்கமா பேசுறான்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பாரதிகண்ணம்மா

Bharathikannamma: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதிலும் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவி வெகு சீக்கிரமே ஃபேமஸானார். அதனாலயே இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர் இந்த சீசனின் செம ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்ட் என பலரும் யூகித்தனர்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வினுஷா, வீட்டை விட்டு வெளிவந்ததும் பகீர் பேட்டியை அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் அக்கான்னு வினுஷாவை கூப்பிட்ட நிக்சன் அவரை படு கேவலமாக விமர்சித்து அசிங்கமா பேசி இருக்கார் என்று சமீபத்திய பேட்டியில் ஆதங்கப்பட்டுள்ளார். நிக்சன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களையும் உறவு முறை வைத்து கூப்பிட்டார்.

ஐசு என்னுடைய அத்தை பொண்ணு, விசித்ரா எனக்கு பெரியம்மா, மாயா என்னுடைய அக்கா, கடைசியில் வினுஷாவை இந்த வீட்டு சமையல்காரம்மா என்று சொல்லி அசிங்கப்படுத்தினார். ஆனால் கண்ணம்மாவிடம் நிக்சன் ஒரு தம்பி போல் அக்கா அக்கான்னு பேசி பழகி இருக்கிறார். அப்படி இருந்து கொண்டு வினுஷாவை பிக் பாஸ் வீட்டில் பாடி ஷேமிங் செய்திருக்கிறார். இதை வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன பிறகு, அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் வலித்ததாக ஆதங்கப்பட்டு பேட்டியளித்துள்ளார்.

Also Read: பிரதீப்பை ஆட்டம் காண வைக்கும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

‘அக்கான்னு கூப்டுட்டு இப்படி தான் பேசுவியா! வீட்டில் இருப்பவர்களை இப்படி பேசினால் கூட தப்புதான், ஆனால் என்னை அக்கா என்று அழைத்து, பின்புறம் சமையல்காரி போல் இருப்பதாக சொன்னது ரொம்பவே வலிச்சுச்சு. அவனோட அக்காவா இருந்திருந்தா இப்படித்தான் பார்த்திருப்பானா!’ என்று மிகுந்த வருத்தத்துடன் பேசினார்.

நிக்சன் பிக் பாஸ் வீட்டில் இருந்து விரைவில் வெளிவந்து விடுவார், வந்ததும் அவர் மூஞ்சிக்கு நேராக இதை போய் கேட்பேன் என்று பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா தேவி கூறினார். இவருடைய இந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்ததும் வாய் கிழிய பேசுகிறது வினுஷா, பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் இதே போன்ற பேசியிருந்தால் இப்போது எலிமினேட் ஆகியிருக்க மாட்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது எதுவுமே செய்யாமல் மிச்சர் மட்டுமே தின்று கொண்டிருந்தார். நிக்சனாவது ஐசு உடன் காதல் டிராக்கை ஓட்டி கொஞ்சமாவது வெளியே தெரிந்தார். ஆனால் கண்ணம்மா சுத்த மோசம். இவர் எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என்று அவருக்கே தெரியல. இப்ப வந்துட்டு அவரை உருவ கேலி செய்ததற்கு மட்டும் ஆவேசத்துடன் பேட்டி அளித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் வினுஷாவை வறுத்தெடுக்கின்றனர்.

Also Read: 5 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. அடேங்கப்பா! இதுக்கா இவ்வளவு அவமானம்

Trending News