செட்டு போட்டு எடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை நேரடி லொகேஷன்களுக்கு அழைத்துச்சென்று அங்கேயும் படமாக்க முடியும் என நிரூபித்தவர் தான் பாரதிராஜா. தமிழ் சினிமாவை வேறு ஒரு கோணத்தில் பிரகாசமாக்கியவர்.
அதுமட்டுமில்லாமல் எதார்த்த படங்களை எடுப்பதில் ஞானியாகவும் பாரதிராஜா அந்தக் கால ரசிகர்களால் பாராட்டப்பட்டார். ஹீரோக்களுக்காக படம் பார்த்த காலம் போய் இயக்குனர்களுக்காக படம் பார்த்த காலகட்டம் அது. அந்தவகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே என்ற முதல் படமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
அதைத் தொடர்ந்து வெளியான கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர்ந்து ஐந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆனார். அதன் பிறகு யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஆறாவதாக பாரதிராஜா இயக்கிய நிழல்கள் என்ற திரைப்படம் தோல்வியை சந்தித்தது. பாரதிராஜாவின் சினிமா கேரியரில் முதல் தோல்வியை சந்தித்த படமும் இதுதான்.
நிழல்கள் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்ற அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை. மேலும் அவர் நாயகனாக நடித்த கல்லுக்குள் ஈரம் என்ற படமும் தோல்வியை சந்தித்தது. அந்த படத்தின் இயக்குனர் வேறு ஒருவராக இருந்தாலும் அந்த படத்தை பாதிவரை இயக்கியவர் பாரதிராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து மேலும் சில வருடங்களுக்கு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அரியணையில் நீண்ட நாட்கள் அமர்ந்திருந்த இயக்குனரும் பாரதிராஜா தான்.
பாரதிராஜா இதுவரை தன்னுடைய சினிமா கேரியரில் 43 படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் தயாரிப்பாளராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தற்போது வரை தமிழ் சினிமாவில் பங்காற்றி கொண்டிருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் உங்களை கவர்ந்த படம் எது என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.