அன்றைய காலகட்டத்தில் பல சினிமா பிரபலங்கள் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்து நடிகர் நடிகைகளை தூக்கி விடுவார்கள். அந்தவகையில் பாரதிராஜாவிற்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்த பிரபல காமெடி நடிகர் தமிழ் சினிமாவில் தற்போதும் நடித்து வருகிறார்.
பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறந்த அந்த காமெடி நடிகர் ஏஜிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். கிட்டதட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்தவர்.
பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் ஜனகராஜ் அறிமுகப்படுத்தினார். தனக்கு உதவி செய்தார் என்பதற்காக மட்டும் இல்லாமல் இவரது திறமையை பார்த்து வாய்ப்பு கொடுத்தாராம்.
துணை நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ஜனகராஜ் நடிப்பில் வெளிவந்த நாயகன், கிழக்கு வாசல், அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. எதார்த்தமான காமெடியில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை வைத்துக் கொண்டார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் ஜனகராஜ் இல்லாமல் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் வெளிவருவது இல்லையாம். ஆனால் சில கெட்ட பழக்கங்களால் அதாவது படப்பிடிப்பிற்கு குடித்துவிட்டு வரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குடித்து விட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதால் பல பட வாய்ப்புகள் இவர் கையைவிட்டு நழுவியது. இதனைத்தொடர்ந்து பல லட்சக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளார் ஜனகராஜ். 2018 ஆம் ஆண்டு 96 படத்தில் வாட்ச்மேனாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் தாதா-87 என்பது குறிப்பிடத்தக்கது.