Director Bharathiraja: 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்தவர்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் தனது 80 வயதில் ‘மாடர்ன் லவ்’ என்ற வெப் சீரிஸில் ‘பறவைகள் கூட்டில் வாழும் மான்கள்’ என்ற ஒரு பகுதி இயக்கி அசத்தியவர்.
இப்படிப்பட்டவருக்கு இந்த நிலைமை என பலரும் பதற வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாரதிராஜா வயது மூப்பு காரணமாக பல பிரச்சனைகள் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சற்று உடல் நலம் தேறி நன்றாக நார்மலாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
Also Read: படுத்த படுக்கையில் உயிர் நண்பன், 45 வருடங்களாக நன்றியுடன் இருக்கும் வைரமுத்து.. எழுந்து வா இமயமே!
தற்சமயம் மறுபடியும் அவருக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டது. மருத்துவமனை சென்ற அவரது நண்பர் வைரமுத்து, அவருக்கு என்று ஒரு தனித்துவமான கவிதையை சொல்லி ஆனந்த பட வைத்தார். இப்பொழுது அவருக்கு இருக்கும் பெரும் பிரச்சனையை ஞாபகம் மறதி தானாம்.
எல்லாத்தையும் மறந்து விடுகிறாராம். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்த அவரை சந்திக்க பழைய நண்பர்கள் ப்ரோக்ராம் போட்டு வந்தார்களாம். அவர்களை தேனி வீட்டிற்கு வர சொல்லி அங்கே மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார் பாரதிராஜா.
அவர்களும் அனைவரும் வெளிநாட்டில் இருந்து சொன்ன தேதிக்கு தேனி வந்து விட்டனர். அங்கே உள்ள வேலை ஆட்களிடம் பாரதிராஜா எல்லாத்தையும் சொல்லி அவர்களை கவனிக்கச் செய்துள்ளார். ஆனால் பாரதிராஜா இந்த தேதியன்று தேனி போக வேண்டும் என்பதையே மறந்து விட்டாராம் .
இப்படி மறந்து விட்டதால் அந்த சந்திப்பு நடைபெறாமல், அவர்களும் தேனி வந்து வீட்டில் தங்கி விட்டு பாரதிராஜாவை பார்க்காமலே சென்று விட்டாராம். 82 வயதாகும் பாரதிராஜா எல்லாவற்றையும் மறந்து விட்டு அவ்வப்போது குழந்தை மாதிரியே மாறிவிடுகிறார். இது இவருக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதால், இதை சரி செய்ய முடியாமல் அவருடைய குடும்பத்தினர் தவிக்கின்றனர்.