சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கடைசி வரை பாரதிராஜாவால் இயக்க முடியாமல் போன நடிகை.. வாய்ப்பு கை நழுவிப் போன துரதிர்ஷ்டம்

இயக்குனர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர்.

மேலும் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட பாரதிராஜா தன்னுடைய படத்தில் அந்த நடிகையை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என ஆசைப்பட்டார்.

Also Read : பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

அதற்குண்டான கதையையும் ரெடி பண்ணினார். இந்தக் கதையில் எப்படியாவது ஜெயலலிதாவை நடிக்க வைக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார் பாரதிராஜா. ஆனால் பல குழப்பங்கள் காரணமாக அவர் நடிக்க முடியாமல் போனது.

ஜெயலலிதாவிற்காக பாரதிராஜா உருவாக்கிய படத்தின் கதை தான் 1884 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில், இளையராஜா இசையமைத்து வெளிவந்த புதுமைப் பெண். இந்த கதையை முதலில் பாரதிராஜா ஜெயலலிதாவிற்கு தான் எழுதியுள்ளார்.

Also Read : இன்று வரை மக்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்கள்.. காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்

ஜெயலலிதா இந்த படத்தின் கதையில் நடிக்க முடியாமல் போன பிறகுதான் ரேவதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பாண்டியன்-ரேவதி ஜோடி சேர்ந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் தான் ராஜசேகர் வில்லனாக முதன் முதலாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

மேலும் புதுமைப் பெண் படத்திற்காக பாரதிராஜா ஜெயலலிதாவை வைத்து கற்பனை செய்ததை ஓரளவு மட்டுமே ரேவதியை வைத்து எடுத்து முடித்து அதிலும் வெற்றி கண்டிருக்கிறார் பாரதிராஜா. இருப்பினும் அவருக்கு ஜெயலலிதாவை வைத்து படம் எடுப்பது நிறைவேறாத கனவாகவே போனது.

Also Read : பாரதிராஜாவின் மானத்தை காப்பாற்றிய உதவி இயக்குனர்.. யாரும் அறிந்திராத மணிவண்ணனை பற்றிய உண்மைகள்!

- Advertisement -spot_img

Trending News