வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பதுங்கியிருக்கும் புலி.. பொன்னியின் செல்வனால் சரியான திட்டம் தீட்டி காத்திருக்கும் பாரதிராஜா

பொன்னியின் செல்வன் நாவலை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் மணிரத்தினம். இவருடைய திரைக்கனவு பொன்னியின் செல்வன் படம் என்பதால், 240 கோடி பட்ஜெட்டில் லைக்காவுடன் இணைந்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து தயாரித்தார். அதற்கேற்றார் போல் இந்த படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்த படம் மட்டுமல்ல இதற்கு முன்பு 80, 90களில் சூப்பர் ஹிட் அடித்த பல படங்களை கொடுத்தவர் கொடுத்தவர் மணிரத்தினம். ஆகையால் தமிழ் படங்களை எடுப்பதில் இவருக்கு நிகரான ஒரு இயக்குனருக்கு உண்டு என்று அனைவரும் மீண்டும் ஆச்சரியத்தில் பார்க்கும் அளவிற்கு, பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி மீண்டும் தன் பெயரை காப்பாற்றி விட்டார்.

Also Read: நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட பெரிய தலைகள்.. பொன்னியின் செல்வன் டீம் விடிய விடிய அடித்த கூத்து

ஆனால் பழைய புலி ஒன்று பதுங்கி இருக்கிறது. சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் பாரதிராஜா நிகராக படம் எடுக்கணும் என்று ஆசைப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் பாரதிராஜா.

ஆனால் இப்பொழுது பாரதிராஜாவுக்கு வயது மூப்பு காரணமாகவும் நடிப்பில் ஆர்வம் காட்டியதாலும் படம் இயக்குவதில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கிறது.  ஆனால் அவர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனால் பெரிதும் தாக்கம் அடைந்துள்ளார். கூடிய விரைவில் நான் படம் எடுப்பேன் என்றும் காத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம்.. மணிரத்தினம், ஷங்கருக்கு எல்லாம் நான் குரு

இறப்பதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் போல் ஒரு மெகா படம் கொடுத்துவிடுவேன் என்று திட்டம் போட்டு வருகிறார். அவரின் இத்தகைய ஆசைக்கு இவருக்கு உறுதுணையாக வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் வேறு இளம் இயக்குனர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

இப்போது பாரதிராஜா படத்தை இயக்குவது உறுதியாகி வேலை நடைபெறுகிறது. இசை இளையராஜா வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மகள் பவதாரணி இசை அமைக்கிறார். படம் அதற்கான வேலைகள் அதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும்.

Also Read: பொன்னியின் செல்வன் நடிகையுடன் ரகசிய தொடர்பில் நாக சைதன்யா.. போட்டோவுடன் மாட்டிக்கொண்ட பரிதாபம்

Trending News