தமிழ் சினிமாவில் பாரதிராஜா பல நடிகர் மற்றும் நடிகைகள் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கும் இணைந்துள்ளார். ஆமா வழிய தேடி போய் கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் பாரதிராஜா. இந்த சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்.
தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் பாரதிராஜா இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதனால் இவரது படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தவமிருந்து உள்ளனர்.
பாரதிராஜா நிழல்கள் படத்திற்கு பிறகு புதிதாக ஒரு கதை எழுதி அந்த படத்திற்காக கதாநாயகன் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராயப்பேட்டை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனை முதலில் படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்துள்ளார்.
இப்படத்திற்கு அந்த மாணவன் சரியாக இருக்க மாட்டேன் என திரைத்துறையினர் பல பேர் கூறியதால். இப்படத்திற்கு கதாநாயகியாக ராதாவை மட்டுமே தேர்வு செய்து வைத்திருந்தார்.
தன்னுடைய படத்திற்கு கதாநாயகன் கிடைக்கவில்லை என அலைந்து கொண்டிருந்த போது போயஸ் கார்டன் வழியாக முத்துராமன் வீட்டை கடந்து சென்றுள்ளார் பாரதிராஜா. அப்போது முரளி என்ற பையன் பேட்மிட்டன் விளையாட்டை விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அதனை பார்த்த பாரதிராஜா அந்த பையன் யார் என கேட்டுள்ளார். அதற்கு உடனிருந்தவர்கள் அந்தப் பையன் முத்துராமனின் மகன் என கூறியுள்ளனர். உடனே முத்துராமன்னிடம் சென்று எனது படத்தில் உங்கள் மகனை நடிக்க வைப்பீர்களா என கேட்டுள்ளார். அதற்கு முத்துராமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து சம்மதித்துள்ளார்.
பின்பு படத்திற்கு எப்படி அலைகள் ஓய்வதில்லை என பெயர் வைத்தார்களோ அதே மாதிரி கார்த்திக்கும் முரளி என்ற பெயரை மாற்றி கார்த்திக் என பெயர் வைத்துள்ளனர். பின்பு நாளடைவில் நவரச நாயகன் கார்த்திக் என பெயராக மாறியது. அதுமட்டுமில்லாமல் கார்த்திக்கு பைலட்டாக வேண்டும் என்பது தான் முதலில் கனவாக இருந்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக பாரதிராஜா வாய்ப்பு கொடுத்து அவர் திரைத்துறையில் அழைத்து வந்துள்ளார்.