தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு இயக்குனரை நம்பி தான் இருப்பார்கள். அப்படி ரவிச்சந்திரன் என்ற நடிகரான நிழல்கள் ரவி பாலச்சந்தர் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் இறுதிவரை இவர் நினைத்தபடி பாலச்சந்தர் படத்தில் ஹீரோவாக பணியாற்ற முடியவில்லை.
அதன் பிறகு கமல் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான மரோசரித்ரா என்ற படத்தில் தமிழில் ஹீரோவாக நிழல்கள் ரவி ஒப்பந்தமானார். பாலச்சந்தருக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குனராக பெயர் பெற்றவர்தான் பாரதிராஜா அதனால் இவர் படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
நினைத்தபடி பாரதிராஜா வாய்ப்பு தருவதாக கூறியதால், அதன் பிறகு வந்த பல படங்களின் வாய்ப்புகளை, பாரதிராஜா கூப்பிட்டால் நடிக்க முடியாமல் போய் விடுமோ என பயந்து அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்துள்ளார்.
பின்பு ஒரு முறை பாரதிராஜாவை நேரில் சந்தித்து எனக்கு வாய்ப்பு தருவீர்களா மாட்டீர்களா என்ன மன வேதனையுடன் கேட்டுள்ளார். பின்பு பாரதிராஜா இளையராஜா ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று.
இதோபார் நிழல்கள் என்ற படத்திற்கு தான் இளையராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் தான் நீ நடிக்கப்போகிறார் என அவரிடம் கூறியுள்ளார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் இவருக்கு நிழல்கள் ரவி என பெயர் கிடைத்தது. இவர் பன்முகத் திறமை கொண்டவர் துணை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் என அனைத்து துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.