சாமானிய மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை அச்சுபிசகாமல் ஒரு படமாக காண்பிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் இயக்குனர் பாரதிராஜா அதை மிகவும் அசால்ட்டாக செய்து காட்டுவார். அவரின் படங்களில் ஆடு மாடுகள் ஏன் மரங்கள் கூட நடிக்கும். அந்த அளவிற்கு அவரின் படங்களில் எதார்த்தம் இருக்கும்.
பெரும்பாலும் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை தான் பாராதிராஜா அதிகளவில் இயக்கியுள்ளார். அந்த படங்களில் எல்லாம் கிராமத்து மண் வாசனை வீசும். படம் பார்க்கும் நமக்கு அந்த சம்பவங்கள் அனைத்தும் கண்முன்னே உண்மையாக நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
உதாரணமாக பாராதிராஜா இயக்கத்தில் வெளியான பதினாறு வயதினிலே, கருத்தம்மா, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட படங்களை கூறலாம். இதில் கிழக்குச் சீமையிலே படத்தில் அண்ணன் தங்கை இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மிகவும் தத்ரூபமாக காட்டியிருப்பார். தற்போது வரை இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
இப்படிப்பட்ட இயக்குனர் மற்றொரு இயக்குனரால் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். அந்த சமயத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான நாயகன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பட்டிதொட்டி எங்கும் நாயகன் பெருமை பேசியது.
ஒரு சக இயக்குனராக இதை பார்த்து சந்தோசப்படாமல் பொறாமைப்பட்ட பாரதிராஜா நாயகன் படம் வெளியான சமயத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடவே இல்லையாம். நான் எப்படியாவது நாயகனைவிட சிறந்த படத்தை வழங்க வேண்டும், மணிரத்னத்தை வெல்ல வேண்டும் என கூறி சாப்பிடாமல் இருந்துள்ளார்.
திரையுலகில் ஒருவருக்கொருவர் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை மட்டும் இருக்கவே கூடாது. அந்த போட்டியும் ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நல்லது. ஒரு முன்னணி இயக்குனரே இப்படி செய்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.